• Apr 02 2025

துப்பாக்கி தொழிற்சாலையை நடத்தியவர் திடீர் சுற்றிவளைப்பில் கைது

Chithra / Oct 21st 2024, 1:45 pm
image

 

சூரியவெவ, வெவேகம பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் துப்பாக்கி தயாரிக்கும் சிறிய தொழிற்சாலையை நடத்தி வந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

விசேட அதிரடிப்படையின் ஹம்பாந்தோட்டை முகாம் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கு அமைய நேற்று (20) இந்த சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டது.

அங்கு உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட டி கட்டஸ் ரக துப்பாக்கி, பாதி முடிக்கப்பட்ட துப்பாக்கியின் பாகங்கள் மற்றும் ஆயுத பாகங்கள் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர் அதே பகுதியைச் சேர்ந்த 33 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக சூரியவெவ பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

துப்பாக்கி தொழிற்சாலையை நடத்தியவர் திடீர் சுற்றிவளைப்பில் கைது  சூரியவெவ, வெவேகம பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் துப்பாக்கி தயாரிக்கும் சிறிய தொழிற்சாலையை நடத்தி வந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.விசேட அதிரடிப்படையின் ஹம்பாந்தோட்டை முகாம் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கு அமைய நேற்று (20) இந்த சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டது.அங்கு உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட டி கட்டஸ் ரக துப்பாக்கி, பாதி முடிக்கப்பட்ட துப்பாக்கியின் பாகங்கள் மற்றும் ஆயுத பாகங்கள் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.சந்தேகநபர் அதே பகுதியைச் சேர்ந்த 33 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக சூரியவெவ பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement

Buy Now