• Jul 15 2025

ஒலுவில் தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் மீது தாக்குதல்; 9 பேர் வைத்தியசாலையில்

Chithra / Jul 15th 2025, 10:17 am
image

 

அம்பாறை மாவட்டம் ஒலுவில் தென்கிழக்கு பல்கலைக்கழக பொறியியல் பீட 1ம் வருட மாணவர்கள் மீது சிரேஷ்ட மாணவர்கள் மேற்கொண்ட தாக்குதலில் 9 மாணவர்கள் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று இரவு ஒலுவில் பகுதியில் உள்ள தென்கிழக்கு வளாகத்தில் கல்வி கற்கும் மாணவர்கள் மீது இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதன் போது காயமடைந்த 5 மாணவர்கள் ஒலுவில் பிரதேச வைத்தியசாலையிலும்  ஏனைய 4 மாணவர்கள் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் கடந்த மாதமும் முதலாமாண்டு மாணவர்களை பகிடிவதை செய்த குற்றச்சாட்டின் அடிப்படையில் ஒலுவில் பல்கலைக்கழக பொறியியல் பீடத்தைச்  சேர்ந்த 22 மாணவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக குறித்த பல்கலைக்கழகத்தின் நிர்வாகம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


ஒலுவில் தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் மீது தாக்குதல்; 9 பேர் வைத்தியசாலையில்  அம்பாறை மாவட்டம் ஒலுவில் தென்கிழக்கு பல்கலைக்கழக பொறியியல் பீட 1ம் வருட மாணவர்கள் மீது சிரேஷ்ட மாணவர்கள் மேற்கொண்ட தாக்குதலில் 9 மாணவர்கள் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.நேற்று இரவு ஒலுவில் பகுதியில் உள்ள தென்கிழக்கு வளாகத்தில் கல்வி கற்கும் மாணவர்கள் மீது இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.இதன் போது காயமடைந்த 5 மாணவர்கள் ஒலுவில் பிரதேச வைத்தியசாலையிலும்  ஏனைய 4 மாணவர்கள் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.மேலும் கடந்த மாதமும் முதலாமாண்டு மாணவர்களை பகிடிவதை செய்த குற்றச்சாட்டின் அடிப்படையில் ஒலுவில் பல்கலைக்கழக பொறியியல் பீடத்தைச்  சேர்ந்த 22 மாணவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக குறித்த பல்கலைக்கழகத்தின் நிர்வாகம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement