• May 03 2024

பல அரசியல் கட்சிகள் மாயையில் வாழ்கின்றன..! ரணில் தரப்பு ஆதங்கம்

Chithra / Apr 3rd 2024, 10:43 am
image

Advertisement

 

இலங்கையில் 60 வீதத்துக்கும் அதிகமான வாக்காளர்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பது தொடர்பில் இன்னும் தீர்மானிக்கப்படாத நிலையில் உள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் உதவித் தலைவர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இந்த விடயம் தெரியவந்துள்ளதாக அண்மையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் கூறியுள்ளார். 

சில அரசியல் கட்சிகள் அதிக வாக்குகளைப் பெறும் என எதிர்பார்க்கப்படும் வதந்திகள் பொய்யானவை, அந்த அரசியல் கட்சிகள் மாயையில் வாழ்கின்றன.

அதேவேளை, 2015 ஆம் ஆண்டு இடம்பெற்ற அதிபர் தேர்தலின் போது நாட்டில் ஏற்பட்ட ஆச்சரியத்தை போன்றதொரு ஆச்சரியத்தை தற்போதைய அதிபர் ரணில் விக்கிரமசிங்க ஏற்படுத்துவார்.

திரைக்கு பின்னால் பல விடயங்கள் நடக்கின்றன, எனவே வெளியில் இருந்து பார்த்து முடிவுகளுக்கு வர வேண்டாம்.

பல தனிநபர்களும் கட்சிகளும் அதிபர் ரணில் விக்ரமசிங்கவுக்கு தங்கள் ஆதரவை உறுதியளித்துள்ளனர், மேலும் தேர்தல் நெருங்கும்போது அவர்கள் நடவடிக்கை எடுப்பார்கள். என்றார்.


பல அரசியல் கட்சிகள் மாயையில் வாழ்கின்றன. ரணில் தரப்பு ஆதங்கம்  இலங்கையில் 60 வீதத்துக்கும் அதிகமான வாக்காளர்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பது தொடர்பில் இன்னும் தீர்மானிக்கப்படாத நிலையில் உள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் உதவித் தலைவர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இந்த விடயம் தெரியவந்துள்ளதாக அண்மையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் கூறியுள்ளார். சில அரசியல் கட்சிகள் அதிக வாக்குகளைப் பெறும் என எதிர்பார்க்கப்படும் வதந்திகள் பொய்யானவை, அந்த அரசியல் கட்சிகள் மாயையில் வாழ்கின்றன.அதேவேளை, 2015 ஆம் ஆண்டு இடம்பெற்ற அதிபர் தேர்தலின் போது நாட்டில் ஏற்பட்ட ஆச்சரியத்தை போன்றதொரு ஆச்சரியத்தை தற்போதைய அதிபர் ரணில் விக்கிரமசிங்க ஏற்படுத்துவார்.திரைக்கு பின்னால் பல விடயங்கள் நடக்கின்றன, எனவே வெளியில் இருந்து பார்த்து முடிவுகளுக்கு வர வேண்டாம்.பல தனிநபர்களும் கட்சிகளும் அதிபர் ரணில் விக்ரமசிங்கவுக்கு தங்கள் ஆதரவை உறுதியளித்துள்ளனர், மேலும் தேர்தல் நெருங்கும்போது அவர்கள் நடவடிக்கை எடுப்பார்கள். என்றார்.

Advertisement

Advertisement

Advertisement