• Mar 14 2025

நாட்டை உலுக்கிய துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் - வெளியான பல புதிய தகவல்கள்

Chithra / Mar 14th 2025, 4:18 pm
image



காலி அக்மீமன பகுதியில் சிறைச்சாலை அதிகாரி ஒருவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி நேற்று உயிரிழந்தார். இந்நிலையில் குறித்த துப்பாக்கி சூடுபற்றி புதிய பல தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தக் கொலையை செய்வதற்காக 3 பேர் பிரவேசித்தமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது. 

அவர்கள் பயணித்ததாகக் கருதப்படும் இரண்டு உந்துருளிகளும், 3 தலைக்கவசங்களும் யக்கலமுல்ல பகுதியில் வைத்துக் கைப்பற்றப்பட்டுள்ளன.  

உயிரிழந்த நபர் கடந்த வருடம் பெப்ரவரி மாதம் சேவையிலிருந்து விலகியிருந்தார். 

இந்த துப்பாக்கிச் சூட்டுக்காக 9 மில்லிமீற்றர் ரக துப்பாக்கி பயன்படுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.


இதேவேளை வெலிவேரிய அரலியகஸ்தெக சந்திப் பகுதியில் நேற்று (13) இரவு நடந்த துப்பாக்கிச் சூடு தொடர்பிலும் புதிய தகவல் கசிந்துள்ளது.

மோட்டார் வாகனத்தில் பயணித்த ஒருவரை இலக்கு வைத்து இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக 

பொலிஸார் தெரிவித்தனர்.

துப்பாக்கிச் சூட்டில் அந்த நபரின் இடது கை காயமடைந்துள்ள நிலையில், துப்பாக்கிச் சூடு நடந்த பின்னர், அவர் வாகனத்தை நிறுத்தாமல் வைத்தியசாலை நோக்கி சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.

மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இருவரால் பிஸ்டல் வகை துப்பாக்கியைப் பயன்படுத்தி இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாக மூன்று பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றன.


நாட்டை உலுக்கிய துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் - வெளியான பல புதிய தகவல்கள் காலி அக்மீமன பகுதியில் சிறைச்சாலை அதிகாரி ஒருவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி நேற்று உயிரிழந்தார். இந்நிலையில் குறித்த துப்பாக்கி சூடுபற்றி புதிய பல தகவல்கள் வெளியாகியுள்ளன.இந்தக் கொலையை செய்வதற்காக 3 பேர் பிரவேசித்தமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது. அவர்கள் பயணித்ததாகக் கருதப்படும் இரண்டு உந்துருளிகளும், 3 தலைக்கவசங்களும் யக்கலமுல்ல பகுதியில் வைத்துக் கைப்பற்றப்பட்டுள்ளன.  உயிரிழந்த நபர் கடந்த வருடம் பெப்ரவரி மாதம் சேவையிலிருந்து விலகியிருந்தார். இந்த துப்பாக்கிச் சூட்டுக்காக 9 மில்லிமீற்றர் ரக துப்பாக்கி பயன்படுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.இதேவேளை வெலிவேரிய அரலியகஸ்தெக சந்திப் பகுதியில் நேற்று (13) இரவு நடந்த துப்பாக்கிச் சூடு தொடர்பிலும் புதிய தகவல் கசிந்துள்ளது.மோட்டார் வாகனத்தில் பயணித்த ஒருவரை இலக்கு வைத்து இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.துப்பாக்கிச் சூட்டில் அந்த நபரின் இடது கை காயமடைந்துள்ள நிலையில், துப்பாக்கிச் சூடு நடந்த பின்னர், அவர் வாகனத்தை நிறுத்தாமல் வைத்தியசாலை நோக்கி சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இருவரால் பிஸ்டல் வகை துப்பாக்கியைப் பயன்படுத்தி இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.இந்த சம்பவம் தொடர்பாக மூன்று பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றன.

Advertisement

Advertisement

Advertisement