• Oct 19 2024

இலங்கையிலுள்ள தமிழர்களுக்கு இராணுவத்தினரால் பாரிய சித்திரவதை...! ஐரோப்பிய நீதிமன்ற தீர்ப்பிற்கு வரவேற்பு.!samugammedia

Sharmi / Apr 24th 2023, 11:17 am
image

Advertisement

இறுதிகட்ட யுத்ததின் பின்னர் இலங்கையில் பாரிய சித்திரவதைகள் இடம்பெற்றிருப்பது ஐரோப்பிய நீதிமன்றத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதை வரவேற்பதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செ.கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

நேற்று யாழில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கிற்கு வழங்கப்பட்டுள்ள தீர்ப்பின் மூலம் இலங்கை அரசாங்கம் குற்றவாளிகளுக்கு உரிய தண்டனையை வழங்கவேண்டுமென வலியுறுத்தப்படுவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் மேலும் பலர் சித்திரவதைகளுக்கு உள்ளானவர்கள் உள்ளதாகவும் அவர்களுக்கும் விரைவில் நீதி கிடைக்கவேண்டுமென செ.கஜேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

எனினும் சர்வதேச குற்றவியல் விசாரணைகள் மூலமே தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு தீர்வு கிடைக்கும் என்றும் எனவே, அனைத்து தரப்புகளும் அதற்கு ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என்றும் செ.கஜேந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இலங்கையிலுள்ள தமிழர்களுக்கு இராணுவத்தினரால் பாரிய சித்திரவதை. ஐரோப்பிய நீதிமன்ற தீர்ப்பிற்கு வரவேற்பு.samugammedia இறுதிகட்ட யுத்ததின் பின்னர் இலங்கையில் பாரிய சித்திரவதைகள் இடம்பெற்றிருப்பது ஐரோப்பிய நீதிமன்றத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதை வரவேற்பதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செ.கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.நேற்று யாழில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கிற்கு வழங்கப்பட்டுள்ள தீர்ப்பின் மூலம் இலங்கை அரசாங்கம் குற்றவாளிகளுக்கு உரிய தண்டனையை வழங்கவேண்டுமென வலியுறுத்தப்படுவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.இலங்கையில் மேலும் பலர் சித்திரவதைகளுக்கு உள்ளானவர்கள் உள்ளதாகவும் அவர்களுக்கும் விரைவில் நீதி கிடைக்கவேண்டுமென செ.கஜேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.எனினும் சர்வதேச குற்றவியல் விசாரணைகள் மூலமே தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு தீர்வு கிடைக்கும் என்றும் எனவே, அனைத்து தரப்புகளும் அதற்கு ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என்றும் செ.கஜேந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement