கல்கிஸ்ஸை பொலிஸ் பிரிவின் அல்விஸ் அவென்யூ வீதிப் பகுதியில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கி வந்த விபச்சார விடுதி சுற்றிவளைக்கப்பட்டதில் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று (30) பிற்பகல் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் கைது செய்யப்பட்ட நான்கு பேரில், விபச்சாரத்தில் ஈடுபடும் நோக்கத்துடன் தங்கியிருந்த மூன்று இளம் பெண்கள் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
கைது செய்யப்பட்ட மற்றைய சந்தேக நபர் விபச்சார விடுதியின் முகாமையாளர் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர் பொரளை பகுதியைச் சேர்ந்த 46 வயதுடையவர் என்றும், மூன்று பெண் சந்தேக நபர்களும் 28, 29 மற்றும் 34 வயதுடையவர்கள் என்றும், அவர்கள் வெல்லவாய, கொழும்பு 04 மற்றும் வெள்ளவத்தை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை கல்கிசை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மசாஜ் நிலையத்தில் சுற்றிவளைப்பு: இளம் யுவதிகள் கைது. கல்கிஸ்ஸை பொலிஸ் பிரிவின் அல்விஸ் அவென்யூ வீதிப் பகுதியில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கி வந்த விபச்சார விடுதி சுற்றிவளைக்கப்பட்டதில் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.நேற்று (30) பிற்பகல் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் கைது செய்யப்பட்ட நான்கு பேரில், விபச்சாரத்தில் ஈடுபடும் நோக்கத்துடன் தங்கியிருந்த மூன்று இளம் பெண்கள் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.கைது செய்யப்பட்ட மற்றைய சந்தேக நபர் விபச்சார விடுதியின் முகாமையாளர் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.சந்தேக நபர் பொரளை பகுதியைச் சேர்ந்த 46 வயதுடையவர் என்றும், மூன்று பெண் சந்தேக நபர்களும் 28, 29 மற்றும் 34 வயதுடையவர்கள் என்றும், அவர்கள் வெல்லவாய, கொழும்பு 04 மற்றும் வெள்ளவத்தை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை கல்கிசை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.