• Apr 02 2025

கடலில் குளிக்க சென்ற யுவதி சடலமாக மீட்பு - தமிழர் பகுதியில் துயரம்

Chithra / Mar 31st 2025, 4:19 pm
image


முல்லைத்தீவு -  நாயாற்று கடற்பகுதியில் குளித்துக்கொண்டிருந்த போது நீரில் அடித்துச் செல்லப்பட்ட யுவதி சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 

இச் சம்பவம் இன்றையதினம் இடம்பெற்றது. 

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்

உடையார்கட்டு பகுதியில்  தையல் கற்கும் யுவதிகளும், தையல் பயிற்சியாளர்களுமாக 15 பெண்கள்

கப்ரக வாகனத்தில் நாயாற்று கடற்பகுதிக்கு வந்துள்ளனர்.

குறித்த பெண்கள் நாயாற்று கடலில் குளித்து கொண்டிருந்த போது திடீரென மூன்று பெண்கள் நீரில் அடித்து செல்லப்பட்டுள்ளனர்.

நீரில் அடித்துச்செல்லப்பட்ட மூவரில் இரு பெண்கள் மீட்கப்பட்டு மாஞ்சோலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

குறித்த சம்பவத்தில் 47, 21 வயதுடைய பெண்களே நீரில் அடித்து செல்லப்பட்ட வேளை மீட்கப்பட்டு  வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளனர். 

மற்றைய யுவதியை தேடும் பணியில் கடற்படையினர் ஈடுபட்ட நிலையில் யுவதி சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவத்தில் 20 வயதுடைய இருட்டுமடு உடையார்கட்டு பகுதியை சேர்ந்த சிவகுமார் வினுஷிகா எனும் யுவதியே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

வாகனத்தையும், குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய ஏனைய நபர்களையும் கொக்குளாய் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து  செல்லப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்


கடலில் குளிக்க சென்ற யுவதி சடலமாக மீட்பு - தமிழர் பகுதியில் துயரம் முல்லைத்தீவு -  நாயாற்று கடற்பகுதியில் குளித்துக்கொண்டிருந்த போது நீரில் அடித்துச் செல்லப்பட்ட யுவதி சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இச் சம்பவம் இன்றையதினம் இடம்பெற்றது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்உடையார்கட்டு பகுதியில்  தையல் கற்கும் யுவதிகளும், தையல் பயிற்சியாளர்களுமாக 15 பெண்கள்கப்ரக வாகனத்தில் நாயாற்று கடற்பகுதிக்கு வந்துள்ளனர்.குறித்த பெண்கள் நாயாற்று கடலில் குளித்து கொண்டிருந்த போது திடீரென மூன்று பெண்கள் நீரில் அடித்து செல்லப்பட்டுள்ளனர்.நீரில் அடித்துச்செல்லப்பட்ட மூவரில் இரு பெண்கள் மீட்கப்பட்டு மாஞ்சோலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த சம்பவத்தில் 47, 21 வயதுடைய பெண்களே நீரில் அடித்து செல்லப்பட்ட வேளை மீட்கப்பட்டு  வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளனர். மற்றைய யுவதியை தேடும் பணியில் கடற்படையினர் ஈடுபட்ட நிலையில் யுவதி சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.குறித்த சம்பவத்தில் 20 வயதுடைய இருட்டுமடு உடையார்கட்டு பகுதியை சேர்ந்த சிவகுமார் வினுஷிகா எனும் யுவதியே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.வாகனத்தையும், குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய ஏனைய நபர்களையும் கொக்குளாய் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து  செல்லப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

Advertisement

Advertisement

Advertisement