• Jan 15 2025

அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலையில் பாரிய பிரச்சினைகள் - சுட்டிக்காட்டிய முன்னாள் எம்.பி.

Chithra / Jan 3rd 2025, 8:59 am
image

 

அத்தியாவசிய உணவுப் பொருட்கள் உட்பட பல்வேறு பொருட்களின் விற்பனை விலையில் பாரிய பிரச்சினைகள் காணப்படுவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். 

கொழும்பில் நேற்று (02) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்துரைக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். 

அரிசி, பருப்பு, வெள்ளைப்பூடு, உருளைக்கிழங்கு, உப்பு, தேங்காயெண்ணெய் உள்ளிட்ட 63 அத்தியாவசிய உணவுப் பொருட்களின் இறக்குமதியின் போது இதுவரை கடைப்பிடிக்கப்பட்டு வந்த விசேட பண்டவரி கடந்த 31ஆம் திகதியுடன் முடிவடைகிறது. 

எனினும் குறித்த வரிகளைத் தொடர்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.  இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. 

இந்தநிலையிலேயே, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க அத்தியாவசிய உணவுப் பொருட்கள் உட்பட பல்வேறு பொருட்களின் விற்பனை விலையில் பாரிய பிரச்சினைகள் காணப்படுவதாக குறிப்பிட்டுள்ளார். 

எமக்கு கிடைத்த தரவுகளின் அடிப்படையில், ஒரு கிலோ கிராம் காய்ந்த மிளகாய் 513 ரூபாவிற்கு இறக்குமதி செய்யப்படுகிறது.

100 ரூபாய் வரி அடங்கலாக 616 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட வேண்டிய நிலையில் சதொச ஊடாக 845 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகிறது. 

எனவே, இந்த விடயம் தொடர்பில் வர்த்தக அமைச்சர் தெளிவுபடுத்த வேண்டும். 

அத்துடன், 516 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட வேண்டிய காய்ந்த மிளகாயை நீங்கள் எவ்வளவு தொகைக்குக் கொள்வனவு செய்கிறீர்கள் என்பது தொடர்பில் பொது மக்கள் சிந்திக்க வேண்டும். 

513 ரூபாவிற்கு இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ நெத்தலி 100 ரூபாய் வரி அடங்கலாக 621 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட வேண்டும். 

ஆனால், நெத்தலி கிலோ கிராம் ஒன்று 960 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகிறது. 

146 ரூபாவிற்கு இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ கிராம் வெள்ளை அரிசி 211 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட வேண்டும்.

பருப்பு 227 ரூபாவிற்கு இறக்குமதி செய்யப்படுகிறது. அதற்கான வரி 25 சதம். 

ஆனால் என்ன நடக்கிறது. இவை அனைத்துக்குமான விலைப்பட்டியலில் தவறு காணப்படுகிறது. 

ஆகவே, அரசாங்கத்தினால் இந்த நிலைமையினை நிவர்த்தி செய்ய முடியாவிடின், நாட்டை ஆட்சி செய்ய முடியாத நிலைமை ஏற்படும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்

அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலையில் பாரிய பிரச்சினைகள் - சுட்டிக்காட்டிய முன்னாள் எம்.பி.  அத்தியாவசிய உணவுப் பொருட்கள் உட்பட பல்வேறு பொருட்களின் விற்பனை விலையில் பாரிய பிரச்சினைகள் காணப்படுவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று (02) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்துரைக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அரிசி, பருப்பு, வெள்ளைப்பூடு, உருளைக்கிழங்கு, உப்பு, தேங்காயெண்ணெய் உள்ளிட்ட 63 அத்தியாவசிய உணவுப் பொருட்களின் இறக்குமதியின் போது இதுவரை கடைப்பிடிக்கப்பட்டு வந்த விசேட பண்டவரி கடந்த 31ஆம் திகதியுடன் முடிவடைகிறது. எனினும் குறித்த வரிகளைத் தொடர்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.  இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்தநிலையிலேயே, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க அத்தியாவசிய உணவுப் பொருட்கள் உட்பட பல்வேறு பொருட்களின் விற்பனை விலையில் பாரிய பிரச்சினைகள் காணப்படுவதாக குறிப்பிட்டுள்ளார். எமக்கு கிடைத்த தரவுகளின் அடிப்படையில், ஒரு கிலோ கிராம் காய்ந்த மிளகாய் 513 ரூபாவிற்கு இறக்குமதி செய்யப்படுகிறது.100 ரூபாய் வரி அடங்கலாக 616 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட வேண்டிய நிலையில் சதொச ஊடாக 845 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகிறது. எனவே, இந்த விடயம் தொடர்பில் வர்த்தக அமைச்சர் தெளிவுபடுத்த வேண்டும். அத்துடன், 516 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட வேண்டிய காய்ந்த மிளகாயை நீங்கள் எவ்வளவு தொகைக்குக் கொள்வனவு செய்கிறீர்கள் என்பது தொடர்பில் பொது மக்கள் சிந்திக்க வேண்டும். 513 ரூபாவிற்கு இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ நெத்தலி 100 ரூபாய் வரி அடங்கலாக 621 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட வேண்டும். ஆனால், நெத்தலி கிலோ கிராம் ஒன்று 960 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகிறது. 146 ரூபாவிற்கு இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ கிராம் வெள்ளை அரிசி 211 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட வேண்டும்.பருப்பு 227 ரூபாவிற்கு இறக்குமதி செய்யப்படுகிறது. அதற்கான வரி 25 சதம். ஆனால் என்ன நடக்கிறது. இவை அனைத்துக்குமான விலைப்பட்டியலில் தவறு காணப்படுகிறது. ஆகவே, அரசாங்கத்தினால் இந்த நிலைமையினை நிவர்த்தி செய்ய முடியாவிடின், நாட்டை ஆட்சி செய்ய முடியாத நிலைமை ஏற்படும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்

Advertisement

Advertisement

Advertisement