• Sep 23 2024

திருமலையில் விகாரை அமைக்கப்படுவதை எதிர்த்து பாரிய ஆர்ப்பாட்டம்..! எட்டு பேருக்கு தடை உத்தரவு பிறப்பித்த நீதிமன்றம் samugammedia

Chithra / Oct 1st 2023, 11:16 am
image

Advertisement


திருகோணமலை நிலாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆறாம் கட்டை பகுதியில் ஆர்ப்பாட்டம் நடாத்துவதற்கு திருகோணமலை நீதிமன்றம் எட்டு பேருக்கு எதிராக தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

இத்தடை உத்தரவினை திருகோணமலை நீதிமன்ற பதில் நீதவான் எம்.பி.அன்பார் வழங்கியுள்ளார்.

திருகோணமலை- இலுப்பை குளம் பொரலுகந்த ரஜமஹா விகாரை நிர்மாண பணிகளை முன்னெடுக்க வேண்டாம் என கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தடை விதித்திருந்த போதிலும் குறித்த கட்டுமான பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் குறித்த நிர்மான பணிகளை நிறுத்துமாறு கோரி இன்றைய தினம் பாரிய ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்படவிருந்தது.

இதனை அடுத்து நிலாவெளி பொலிஸார் குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படுவதால் பிரச்சனைகள் உருவாக்கப்படலாம் என நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வந்தனர்.

இதனையடுத்து தமிழரசு கட்சியின் திருகோணமலை மாவட்ட தலைவர் சண்முகம் குகதாசன்,  பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன், கோவிந்தன் கருணாகரன் மற்றும் தமிழ் மக்கள் முன்னணி கட்சியின் இளைஞர் அணியின் திருகோணமலை மாவட்ட அமைப்பாளர் கிருஷ்ணபிள்ளை ஸ்ரீ பிரசாத், திருகோணமலை தமிழர் பேரவையின் தலைவர் ஆர்.ஜெரோம், மற்றும் ரமேஷ் நிக்கலஸ் ஆகிய எட்டு பேருக்கு இத்தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


திருமலையில் விகாரை அமைக்கப்படுவதை எதிர்த்து பாரிய ஆர்ப்பாட்டம். எட்டு பேருக்கு தடை உத்தரவு பிறப்பித்த நீதிமன்றம் samugammedia திருகோணமலை நிலாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆறாம் கட்டை பகுதியில் ஆர்ப்பாட்டம் நடாத்துவதற்கு திருகோணமலை நீதிமன்றம் எட்டு பேருக்கு எதிராக தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.இத்தடை உத்தரவினை திருகோணமலை நீதிமன்ற பதில் நீதவான் எம்.பி.அன்பார் வழங்கியுள்ளார்.திருகோணமலை- இலுப்பை குளம் பொரலுகந்த ரஜமஹா விகாரை நிர்மாண பணிகளை முன்னெடுக்க வேண்டாம் என கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தடை விதித்திருந்த போதிலும் குறித்த கட்டுமான பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வந்தது.இந்நிலையில் குறித்த நிர்மான பணிகளை நிறுத்துமாறு கோரி இன்றைய தினம் பாரிய ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்படவிருந்தது.இதனை அடுத்து நிலாவெளி பொலிஸார் குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படுவதால் பிரச்சனைகள் உருவாக்கப்படலாம் என நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வந்தனர்.இதனையடுத்து தமிழரசு கட்சியின் திருகோணமலை மாவட்ட தலைவர் சண்முகம் குகதாசன்,  பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன், கோவிந்தன் கருணாகரன் மற்றும் தமிழ் மக்கள் முன்னணி கட்சியின் இளைஞர் அணியின் திருகோணமலை மாவட்ட அமைப்பாளர் கிருஷ்ணபிள்ளை ஸ்ரீ பிரசாத், திருகோணமலை தமிழர் பேரவையின் தலைவர் ஆர்.ஜெரோம், மற்றும் ரமேஷ் நிக்கலஸ் ஆகிய எட்டு பேருக்கு இத்தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement