• Feb 02 2025

மாவை.சேனாதிராஜாவின் மறைவு தமிழர் சமூகத்திற்கு பேரிழப்பு; அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கம் இரங்கல்..!

Sharmi / Feb 1st 2025, 6:12 pm
image

இலங்கை தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவர் மாவை.சேனாதிராஜாவின் மறைவு தமிழர் சமூகத்திற்கு பேரிழப்பாகும் என்று அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கத்தின் தலைவர்  எஸ்.லோகநாதன் தெரிவித்தார்.

சங்கத்தின் காரைதீவு தலைமைக் காரியாலயத்தில் இன்று (01) நடைபெற்ற இரங்கல் அஞ்சலி நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மறைந்த மூத்த தலைவர் மாவை சேனாதிராஜா தனது ஐந்து தசாப்தகால அரசியல் வாழ்க்கையில், அறவழிப் போராட்டம், சிறைவாசம் எனத் தமிழ் மக்களுக்களின் உரிமைக்காகக் குரல் எழுப்பி வந்தார். அவரின் மறைவானது தமிழ் மக்களுக்குப் பேரிழப்பாகும்.

அன்னாரது மறைவுச் செய்தி பெரும் மன வேதனையையும் ஆழ்ந்த கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. அன்னாரின் மறைவானது தமிழரசுக் கட்சிக்கும், தமிழ் மக்களுக்கும் பேரிழப்பாகும்.

1942 ஒக்டோபர் மாதம் 27 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் பிறந்த மாவை சேனாதிராஜா, அரசியல் மற்றும் பொதுச் சேவை ஆகியவற்றில் தனது வாழக்கையை அர்ப்பணித்திருந்தார்.

அவர் ஒரு சிறந்த அரசியல்வாதியும், திறமையான பேச்சாளரும், தைரியமான மனித உரிமைகள் செயற்பாட்டாளருமாவார்.

மாவை சேனாதிராஜா தனது 19 ஆவது வயதில் அரசியல் பயணத்தைத் தொடங்கி தனது 83 ஆவது வயது வரை தமிழ் மக்களுக்காகத் தனது வாழ்வை அர்ப்பணித்தார்.

போருக்கு முன்னரும் பின்னரும் அவரது அரசியல் செயற்பாடுகள் பல்வேறு பரிணாமங்களைக் கொண்டுள்ளன. அவர் தமிழ் மக்களுக்கு எதிரான அடக்குமுறைகளை கண்டித்து போராடி சிறைவாசமும் அனுபவித்தவர்.

ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக துணிந்து குரல் கொடுத்த மாவை சேனாதிராஜா, இலங்கைத் தமிழரசுக்கட்சியின் தலைவராக கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் 2024 ஆண்டு வரை ஏறக்குறைய 10, வருடங்கள் தலைவராக செயற்பட்டார். 

எமது அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கம் இவருக்காக இரங்கல் அஞ்சலி நிகழ்வை ஏற்பாடு செய்து, அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம் என்றும் குறிப்பிட்டார்.

இதன்போது சங்கத்தின் உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்களும் அவருக்காக இரங்கல் வழிபாடுகளில் ஈடுபட்டனர்.


மாவை.சேனாதிராஜாவின் மறைவு தமிழர் சமூகத்திற்கு பேரிழப்பு; அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கம் இரங்கல். இலங்கை தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவர் மாவை.சேனாதிராஜாவின் மறைவு தமிழர் சமூகத்திற்கு பேரிழப்பாகும் என்று அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கத்தின் தலைவர்  எஸ்.லோகநாதன் தெரிவித்தார்.சங்கத்தின் காரைதீவு தலைமைக் காரியாலயத்தில் இன்று (01) நடைபெற்ற இரங்கல் அஞ்சலி நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மறைந்த மூத்த தலைவர் மாவை சேனாதிராஜா தனது ஐந்து தசாப்தகால அரசியல் வாழ்க்கையில், அறவழிப் போராட்டம், சிறைவாசம் எனத் தமிழ் மக்களுக்களின் உரிமைக்காகக் குரல் எழுப்பி வந்தார். அவரின் மறைவானது தமிழ் மக்களுக்குப் பேரிழப்பாகும்.அன்னாரது மறைவுச் செய்தி பெரும் மன வேதனையையும் ஆழ்ந்த கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. அன்னாரின் மறைவானது தமிழரசுக் கட்சிக்கும், தமிழ் மக்களுக்கும் பேரிழப்பாகும்.1942 ஒக்டோபர் மாதம் 27 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் பிறந்த மாவை சேனாதிராஜா, அரசியல் மற்றும் பொதுச் சேவை ஆகியவற்றில் தனது வாழக்கையை அர்ப்பணித்திருந்தார். அவர் ஒரு சிறந்த அரசியல்வாதியும், திறமையான பேச்சாளரும், தைரியமான மனித உரிமைகள் செயற்பாட்டாளருமாவார்.மாவை சேனாதிராஜா தனது 19 ஆவது வயதில் அரசியல் பயணத்தைத் தொடங்கி தனது 83 ஆவது வயது வரை தமிழ் மக்களுக்காகத் தனது வாழ்வை அர்ப்பணித்தார்.போருக்கு முன்னரும் பின்னரும் அவரது அரசியல் செயற்பாடுகள் பல்வேறு பரிணாமங்களைக் கொண்டுள்ளன. அவர் தமிழ் மக்களுக்கு எதிரான அடக்குமுறைகளை கண்டித்து போராடி சிறைவாசமும் அனுபவித்தவர்.ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக துணிந்து குரல் கொடுத்த மாவை சேனாதிராஜா, இலங்கைத் தமிழரசுக்கட்சியின் தலைவராக கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் 2024 ஆண்டு வரை ஏறக்குறைய 10, வருடங்கள் தலைவராக செயற்பட்டார். எமது அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கம் இவருக்காக இரங்கல் அஞ்சலி நிகழ்வை ஏற்பாடு செய்து, அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம் என்றும் குறிப்பிட்டார்.இதன்போது சங்கத்தின் உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்களும் அவருக்காக இரங்கல் வழிபாடுகளில் ஈடுபட்டனர்.

Advertisement

Advertisement

Advertisement