• Apr 02 2025

வாக்கு பெட்டிகளுக்கு உச்சளவு பாதுகாப்பு! ஆயுதம் தரித்த பொலிஸார் கடமையில்!

Chithra / Sep 8th 2024, 10:41 am
image

 

ஜனாதிபதி தேர்தலின் வாக்கு பெட்டிகளை எடுத்துச் செல்லும் போது  உச்சளவு பாதுகாப்பு வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் தேர்தல் காரியாலயம் இது தொடர்பிலான அறிவித்தலை வெளியிட்டுள்ளது.

வாக்கு பெட்டி எடுத்துச் செல்லும் வாகனம் மற்றும் தேர்தல் அதிகாரிகளின் பாதுகாப்பிற்கு ஆயுதம் தரித்த இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

இந்த வாகனங்களின் முன்னாலும் பின்னாலும் பொலிஸ் வாகனங்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த பாதுகாப்பு நடவடிக்கைக்கு விசேட அதிரடிப் படையினரின் ஒத்துழைப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

வாக்கு பெட்டிகளுக்கு உச்சளவு பாதுகாப்பு ஆயுதம் தரித்த பொலிஸார் கடமையில்  ஜனாதிபதி தேர்தலின் வாக்கு பெட்டிகளை எடுத்துச் செல்லும் போது  உச்சளவு பாதுகாப்பு வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.பொலிஸ் தேர்தல் காரியாலயம் இது தொடர்பிலான அறிவித்தலை வெளியிட்டுள்ளது.வாக்கு பெட்டி எடுத்துச் செல்லும் வாகனம் மற்றும் தேர்தல் அதிகாரிகளின் பாதுகாப்பிற்கு ஆயுதம் தரித்த இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.இந்த வாகனங்களின் முன்னாலும் பின்னாலும் பொலிஸ் வாகனங்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.இந்த பாதுகாப்பு நடவடிக்கைக்கு விசேட அதிரடிப் படையினரின் ஒத்துழைப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

Advertisement

Advertisement

Advertisement