தேசிய தொழிலாளர் தினத்தன்று தேசிய மக்கள் சக்தி இயக்க அரசாங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட மே தின பேரணியை எதிர்வரும் வியாழக்கிழமை (மே 1) கொழும்பில் உள்ள காலி முகத்திடலில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் தலைமையில், அரசாங்கத் தலைவர்களின் பங்கேற்புடன் நடைபெறும் இந்த மே தினக் கூட்டத்திற்கான அணிவகுப்பு நடத்துவது குறித்து இன்னும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என தெரியவருகின்றது.
இதற்கிடையில், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் தலைமையில், அதன் தலைவர்களின் பங்கேற்புடன், தலவாக்கலை நகரில் மே தினக் கூட்டத்தை நடத்த ஐக்கிய மக்கள் சக்தி முடிவு செய்துள்ளது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தற்போது நுகேகொடை ஆனந்த சமரகோன் திறந்தவெளி அரங்கில் மே தினக் கூட்டங்களை நடத்த தீர்மானித்துள்ளதுடன்,
நிமல் சிறிபால டி சில்வா தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் கொழும்பிலும் மே தினக் கூட்டங்களை நடத்தவுள்ளனர்.
மே தினக் கூட்டத்தை ஏற்பாடு செய்வதற்கான நடவடிக்கைகளை ஐக்கிய தேசியக் கட்சி இன்னும் எடுக்கவில்லை.
இந்த நாட்டில் உள்ள பல அரசியல் கட்சிகளும் அமைப்புகளும் தீவின் பல்வேறு பகுதிகளில் மே தினக் கூட்டங்களை நடத்த ஏற்கெனவே முடிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஜனாதிபதி தலைமையில் மே தின பேரணி பல அரசியல் கட்சிகளும் கூட்டங்களை நடத்த முடிவு தேசிய தொழிலாளர் தினத்தன்று தேசிய மக்கள் சக்தி இயக்க அரசாங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட மே தின பேரணியை எதிர்வரும் வியாழக்கிழமை (மே 1) கொழும்பில் உள்ள காலி முகத்திடலில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் தலைமையில், அரசாங்கத் தலைவர்களின் பங்கேற்புடன் நடைபெறும் இந்த மே தினக் கூட்டத்திற்கான அணிவகுப்பு நடத்துவது குறித்து இன்னும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என தெரியவருகின்றது. இதற்கிடையில், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் தலைமையில், அதன் தலைவர்களின் பங்கேற்புடன், தலவாக்கலை நகரில் மே தினக் கூட்டத்தை நடத்த ஐக்கிய மக்கள் சக்தி முடிவு செய்துள்ளது.ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தற்போது நுகேகொடை ஆனந்த சமரகோன் திறந்தவெளி அரங்கில் மே தினக் கூட்டங்களை நடத்த தீர்மானித்துள்ளதுடன், நிமல் சிறிபால டி சில்வா தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் கொழும்பிலும் மே தினக் கூட்டங்களை நடத்தவுள்ளனர்.மே தினக் கூட்டத்தை ஏற்பாடு செய்வதற்கான நடவடிக்கைகளை ஐக்கிய தேசியக் கட்சி இன்னும் எடுக்கவில்லை. இந்த நாட்டில் உள்ள பல அரசியல் கட்சிகளும் அமைப்புகளும் தீவின் பல்வேறு பகுதிகளில் மே தினக் கூட்டங்களை நடத்த ஏற்கெனவே முடிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.