• Nov 27 2024

எம்மவர்களின் திறமைக்கான களங்கள் இன்னும் விரியட்டும் - பளுதூக்கல் வீரர் புசாந்தனுக்கு சிறீதரன் எம்.பி வாழ்த்து...!samugammedia

mathuri / Jan 4th 2024, 10:36 pm
image

சர்வதேச மற்றும் தேசிய ரீதியான பளு தூக்கல் போட்டிகளில் அபார சாதனைகளை நிலைநாட்டியுள்ள, யாழ்ப்பாணம், தென்மராட்சியைச் சேர்ந்த சற்குணராசா புசாந்தனுக்கு, நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அண்மையில் மலேசியாவில் நடைபெற்ற ஆசிய கிளாசிக் பவர்லிஃப்டிங் சம்பியன்ஷிப்  பளுதூக்கல் போட்டியில் இரண்டு வெள்ளிப் பதக்கங்களை வென்ற புசாந்தன், அண்மையில் பண்டாரகம பகுதியில் இடம்பெற்ற தேசியரீதியிலான பளுதூக்கல் போட்டியில் கலந்துகொண்டு, மூன்று பிரிவுகளில் நடைபெற்ற போட்டிகளிலும் பங்கேற்று  மூன்று தங்கப் பதக்கங்களை வென்றுள்ளார். 

120 கிலோவிற்கு மேற்பட்டோருக்கான பிரிவில் கலந்து கொண்ட இவர், squat பிரிவில் 330 கிலோகிராமையும் , benchpress பிரிவில் 175 கிலோகிராமையும், deadlift பிரிவில் 261 கிலோ கிராமையும் தூக்கி வெற்றி பெற்றுள்ளதோடு, குறித்த போட்டியில் மொத்தமாக 766 கிலோ கிராமை தூக்கி புதிய சாதனையையும் படைத்துள்ளார். 

இந்நிலையிலேயே, யாழ்ப்பாண மண்ணின் சாதனைமகனான புசாந்தனை, நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது .


எம்மவர்களின் திறமைக்கான களங்கள் இன்னும் விரியட்டும் - பளுதூக்கல் வீரர் புசாந்தனுக்கு சிறீதரன் எம்.பி வாழ்த்து.samugammedia சர்வதேச மற்றும் தேசிய ரீதியான பளு தூக்கல் போட்டிகளில் அபார சாதனைகளை நிலைநாட்டியுள்ள, யாழ்ப்பாணம், தென்மராட்சியைச் சேர்ந்த சற்குணராசா புசாந்தனுக்கு, நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.அண்மையில் மலேசியாவில் நடைபெற்ற ஆசிய கிளாசிக் பவர்லிஃப்டிங் சம்பியன்ஷிப்  பளுதூக்கல் போட்டியில் இரண்டு வெள்ளிப் பதக்கங்களை வென்ற புசாந்தன், அண்மையில் பண்டாரகம பகுதியில் இடம்பெற்ற தேசியரீதியிலான பளுதூக்கல் போட்டியில் கலந்துகொண்டு, மூன்று பிரிவுகளில் நடைபெற்ற போட்டிகளிலும் பங்கேற்று  மூன்று தங்கப் பதக்கங்களை வென்றுள்ளார். 120 கிலோவிற்கு மேற்பட்டோருக்கான பிரிவில் கலந்து கொண்ட இவர், squat பிரிவில் 330 கிலோகிராமையும் , benchpress பிரிவில் 175 கிலோகிராமையும், deadlift பிரிவில் 261 கிலோ கிராமையும் தூக்கி வெற்றி பெற்றுள்ளதோடு, குறித்த போட்டியில் மொத்தமாக 766 கிலோ கிராமை தூக்கி புதிய சாதனையையும் படைத்துள்ளார். இந்நிலையிலேயே, யாழ்ப்பாண மண்ணின் சாதனைமகனான புசாந்தனை, நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது .

Advertisement

Advertisement

Advertisement