• Jan 13 2025

பாடசாலை மாணவர்கள் எதிர்நோக்கும் சுகாதார ரீதியான சவால்களை நிவர்த்தி செய்ய நடவடிக்கை - வைத்தியர் ஆ. கேதீஸ்வரன்

Tharmini / Dec 30th 2024, 5:09 pm
image

உடற்கல்வி டிப்ளோமா ஆசிரிய சங்கத்தின் தலைவருக்கும் யாழ். பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரனுக்கும் இடையில் இன்று (30) கலந்துரையாடல் நடைபெற்றது.

இந்த கலந்துரையாடலில் பாடசாலை மாணவர்கள் எதிர் நோக்கும் சுகாதார ரீதியான சவால்களை நிவர்த்தி செய்ய வேண்டுகோள் விடப்பட்டது. 

பாடசாலையின் சிற்றூண்டிசாலையின் தரத்தை உயர்த்துதல், விரைவு உணவுகளையும் எண்ணெய் உணவுகளையும் பொதிசெய்த உணவுகளையும் தடைசெய்தல். 

மேலும், கழிப்பறை வசதிகளை ஏற்படுத்தி கொடுத்து தூய்மைப்படுத்தல், தூயநீரினை உறுதிப்படுத்தல், பெண்பிள்ளைகள் மத்தியில் அதிகரித்துள்ள இமோகுளோபின் குறைபாடு,  கட்டிளமைப்பருவ உணவுப்பழக்கம் என்பன பற்றி தெளிவாக பேசப்பட்டது.

அதற்கான நடவடிக்கை 2025 ஆம் ஆண்டு தீவிரமாக மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என பிராந்திய சுகாதார சேவைப்பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் உறுதியாக தெரிவித்தார்.

பாடசாலை மாணவர்கள் எதிர்நோக்கும் சுகாதார ரீதியான சவால்களை நிவர்த்தி செய்ய நடவடிக்கை - வைத்தியர் ஆ. கேதீஸ்வரன் உடற்கல்வி டிப்ளோமா ஆசிரிய சங்கத்தின் தலைவருக்கும் யாழ். பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரனுக்கும் இடையில் இன்று (30) கலந்துரையாடல் நடைபெற்றது.இந்த கலந்துரையாடலில் பாடசாலை மாணவர்கள் எதிர் நோக்கும் சுகாதார ரீதியான சவால்களை நிவர்த்தி செய்ய வேண்டுகோள் விடப்பட்டது. பாடசாலையின் சிற்றூண்டிசாலையின் தரத்தை உயர்த்துதல், விரைவு உணவுகளையும் எண்ணெய் உணவுகளையும் பொதிசெய்த உணவுகளையும் தடைசெய்தல். மேலும், கழிப்பறை வசதிகளை ஏற்படுத்தி கொடுத்து தூய்மைப்படுத்தல், தூயநீரினை உறுதிப்படுத்தல், பெண்பிள்ளைகள் மத்தியில் அதிகரித்துள்ள இமோகுளோபின் குறைபாடு,  கட்டிளமைப்பருவ உணவுப்பழக்கம் என்பன பற்றி தெளிவாக பேசப்பட்டது.அதற்கான நடவடிக்கை 2025 ஆம் ஆண்டு தீவிரமாக மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என பிராந்திய சுகாதார சேவைப்பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் உறுதியாக தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement