• Nov 26 2024

மண்ணுக்குள் இருந்து மீட்கப்பட்ட கைக்குண்டை செயலிழக்கச் செய்ய நடவடிக்கை !

Tharmini / Oct 22nd 2024, 9:55 am
image

கட்டட வேலைக்காக கொட்டப்பட்ட மண்ணுக்குள் இருந்து மீட்கப்பட்ட கைக்குண்டை செயலிழக்கச் செய்ய விசேட அதிரடிபடையினரால் நடவடிக்கை முன்னெடுக்கப் பட்டுள்ளது.அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வீடு ஒன்றில் நேற்று (21) மாலை  கட்டட வேலைக்காக கொட்டப்பட்ட மண்ணில் புதையுண்ட நிலையில் குறித்த கைக்குண்டு மீட்கப்பட்டுள்ளது.

அத்தடன் குறித்த  கட்டட வேலையில் ஈடுபட்டவர்கள் 119 எனும் பொலிஸ் அவசர பிரிவுக்கு தகவல் வழங்கியதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த சம்மாந்துறை பொலிஸார் கைக்குண்டுடை பார்வையிட்டதுடன்  குண்டு செயலிழக்கும் விசேட அதிரடி படையினர் மற்றும் குற்றவியல் தடயவியல் பொலிஸார் வரவழைக்கப்பட்டு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மீட்கப்பட்ட கைக்குண்டை அவ்விடத்தில் இருந்து அகற்றி செயலிழக்கம் செய்வதற்காக இன்று  சம்மாந்துறை நீதவான் நீதிமன்ற கட்டளையை பெற்று  மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிசார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.





மண்ணுக்குள் இருந்து மீட்கப்பட்ட கைக்குண்டை செயலிழக்கச் செய்ய நடவடிக்கை கட்டட வேலைக்காக கொட்டப்பட்ட மண்ணுக்குள் இருந்து மீட்கப்பட்ட கைக்குண்டை செயலிழக்கச் செய்ய விசேட அதிரடிபடையினரால் நடவடிக்கை முன்னெடுக்கப் பட்டுள்ளது.அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வீடு ஒன்றில் நேற்று (21) மாலை  கட்டட வேலைக்காக கொட்டப்பட்ட மண்ணில் புதையுண்ட நிலையில் குறித்த கைக்குண்டு மீட்கப்பட்டுள்ளது.அத்தடன் குறித்த  கட்டட வேலையில் ஈடுபட்டவர்கள் 119 எனும் பொலிஸ் அவசர பிரிவுக்கு தகவல் வழங்கியதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த சம்மாந்துறை பொலிஸார் கைக்குண்டுடை பார்வையிட்டதுடன்  குண்டு செயலிழக்கும் விசேட அதிரடி படையினர் மற்றும் குற்றவியல் தடயவியல் பொலிஸார் வரவழைக்கப்பட்டு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.மீட்கப்பட்ட கைக்குண்டை அவ்விடத்தில் இருந்து அகற்றி செயலிழக்கம் செய்வதற்காக இன்று  சம்மாந்துறை நீதவான் நீதிமன்ற கட்டளையை பெற்று  மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிசார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement