முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இந்த சந்திப்பு புதுடில்லியில் உலகளாவிய விசேட முன்னேற்றங்கள் குறித்த மாநாட்டின் போது இடம்பெற்றுள்ளது.
புது டில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் சர்வதேச இராஜதந்திரிகளின் பங்கேற்புடன் மாநாடு இடம்பெற்றிருந்தது.
இதன்போது தெற்காசியா குறித்த சொற்பொழிவை முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆற்றிருந்தமையும் சிறப்பம்சமாகும்.
மேலும், இந்தியாவின் முன்னணி தொழிலதிபர்கள் குழுவுடன் அவர் கலந்துரையாடல்களில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
ரணில் விக்ரமசிங்க நாளை ஞாயிற்றுக்கிழமை நாட்டுக்கு திரும்புவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரணில் விக்ரமசிங்க மற்றும் இந்தியப் பிரதமர் மோடி இடையே சந்திப்பு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.இந்த சந்திப்பு புதுடில்லியில் உலகளாவிய விசேட முன்னேற்றங்கள் குறித்த மாநாட்டின் போது இடம்பெற்றுள்ளது.புது டில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் சர்வதேச இராஜதந்திரிகளின் பங்கேற்புடன் மாநாடு இடம்பெற்றிருந்தது.இதன்போது தெற்காசியா குறித்த சொற்பொழிவை முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆற்றிருந்தமையும் சிறப்பம்சமாகும்.மேலும், இந்தியாவின் முன்னணி தொழிலதிபர்கள் குழுவுடன் அவர் கலந்துரையாடல்களில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.ரணில் விக்ரமசிங்க நாளை ஞாயிற்றுக்கிழமை நாட்டுக்கு திரும்புவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.