அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா புத்தளம் நகரக் கிளையின் உறுப்பினர்களுக்கும், தேசிய மக்கள் சக்தியின் புத்தளம் பாரளுமன்ற உறுப்பினர் எம்.ஜே.எம். பைசல் ஆகியோருக்கிடையிலான சிநேகபூர்வ சந்திப்பொன்று நேற்றுமுன்தினம் (06) இடம்பெற்றது.
இந்த சந்திப்பின் போது, புத்தளத்துக்கான காழி நீதிபதியின் தேவை , புத்தளம் தள வைத்தியசாலையின் அபிவிருத்தி மற்றும் புத்தளம் தள வைத்தியசாலையில் நோயாளிகளுக்கும், நோயாளர்களை பார்வையிட வரும் பொதுமக்களும் பெரும் அசௌகரியத்தை ஏற்படுத்தும் கட்டாக்காலி நாய்களின் தொல்லைகளை கட்டுப்படுத்தல் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினரின் கவனத்தற்கு கொண்டுவரப்பட்டது.
மேலும், திறந்த பல்கலைக்கழகத்தின் புத்தளம் அலுவலகத்தின் புதிய கட்டிட தேவைப்பாடு, புதிய தொழினுட்ப கல்லூரியின் தேவைப்பாடு என்பனவற்றுடன் வடிகான்களை அமைப்பதன் அவசியம் குறித்தும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் புத்தளம் கிளை உறுப்பினர்களால் பாராளுமன்ற உறுப்பினருக்கு எடுத்துரைக்கப்பட்டது.
இதன்போது, குறித்த விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்துவதாக தெரிவித்த தேசிய மக்கள் சக்தியின் புத்தளம் பாரளுமன்ற உறுப்பினர் எம்.ஜே.எம். பைசல், அவசரமாக முன்னெடுக்க வேண்டிய பணிகளை செய்து கொடுப்பதாகவும், ஏனைய விடயங்களை கட்டம் கட்டமாக முன்னெடுப்பதாகவும் கூறினார்.
அத்துடன், புத்தளம் மாவட்ட அபிவிருத்தி தொடர்பில் திட்டங்களை தயாரித்துள்ளதாகவும், அதனை ஜனாதிபதி மற்றும் அமைச்சர்களுடனும் கலந்துரையாடி விரைவில் அந்த பணிகளை முன்னெடுக்கவுள்ளதாகவும் இந்த சந்திப்பின் போது சுட்டிக்காட்டினார்.
இதன்போது, ஜம்இய்யாவின் உறுப்பினர்கள், பாராளுமன்ற உறுப்பினருக்கு பொன்னாடைப் போர்த்தியும் , நினைவு சின்னம் வழங்கியும் கெளரவித்தனர்.
பாராளுமன்ற உறுப்பினர் பைஸல் மற்றும் புத்தளம் ஜம்இய்யா சிநேகபூர்வ சந்திப்பு அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா புத்தளம் நகரக் கிளையின் உறுப்பினர்களுக்கும், தேசிய மக்கள் சக்தியின் புத்தளம் பாரளுமன்ற உறுப்பினர் எம்.ஜே.எம். பைசல் ஆகியோருக்கிடையிலான சிநேகபூர்வ சந்திப்பொன்று நேற்றுமுன்தினம் (06) இடம்பெற்றது.இந்த சந்திப்பின் போது, புத்தளத்துக்கான காழி நீதிபதியின் தேவை , புத்தளம் தள வைத்தியசாலையின் அபிவிருத்தி மற்றும் புத்தளம் தள வைத்தியசாலையில் நோயாளிகளுக்கும், நோயாளர்களை பார்வையிட வரும் பொதுமக்களும் பெரும் அசௌகரியத்தை ஏற்படுத்தும் கட்டாக்காலி நாய்களின் தொல்லைகளை கட்டுப்படுத்தல் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினரின் கவனத்தற்கு கொண்டுவரப்பட்டது.மேலும், திறந்த பல்கலைக்கழகத்தின் புத்தளம் அலுவலகத்தின் புதிய கட்டிட தேவைப்பாடு, புதிய தொழினுட்ப கல்லூரியின் தேவைப்பாடு என்பனவற்றுடன் வடிகான்களை அமைப்பதன் அவசியம் குறித்தும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் புத்தளம் கிளை உறுப்பினர்களால் பாராளுமன்ற உறுப்பினருக்கு எடுத்துரைக்கப்பட்டது.இதன்போது, குறித்த விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்துவதாக தெரிவித்த தேசிய மக்கள் சக்தியின் புத்தளம் பாரளுமன்ற உறுப்பினர் எம்.ஜே.எம். பைசல், அவசரமாக முன்னெடுக்க வேண்டிய பணிகளை செய்து கொடுப்பதாகவும், ஏனைய விடயங்களை கட்டம் கட்டமாக முன்னெடுப்பதாகவும் கூறினார்.அத்துடன், புத்தளம் மாவட்ட அபிவிருத்தி தொடர்பில் திட்டங்களை தயாரித்துள்ளதாகவும், அதனை ஜனாதிபதி மற்றும் அமைச்சர்களுடனும் கலந்துரையாடி விரைவில் அந்த பணிகளை முன்னெடுக்கவுள்ளதாகவும் இந்த சந்திப்பின் போது சுட்டிக்காட்டினார்.இதன்போது, ஜம்இய்யாவின் உறுப்பினர்கள், பாராளுமன்ற உறுப்பினருக்கு பொன்னாடைப் போர்த்தியும் , நினைவு சின்னம் வழங்கியும் கெளரவித்தனர்.