• May 03 2024

மெஸ்ஸியின் உயிருக்கு ஆபத்து!!

crownson / Dec 22nd 2022, 6:38 am
image

Advertisement

FIFA கால்பந்து போட்டியில் அர்ஜென்டினா வென்றதை அடுத்து அர்ஜென்டினா வீரர்கள் கோப்பையுடன்   ரசிகர்களை பார்க்க நடைபெற்ற ஓப்பன்-டாப் பேருந்து அணிவகுப்பில் அர்ஜென்டினா கேப்டன் லியோனல் மெஸ்ஸி, கணநேரத்தில் விபத்தில் இருந்து தப்பித்துள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 18) நடந்த இறுதிப் போட்டியில் கூடுதல் நேரத்திற்குப் பிறகு அர்ஜென்டினா 4-2 என்ற கோல் கணக்கில் பிரான்சை வீழ்த்தி மூன்றாவது FIFA உலகக் கோப்பையை வென்று தனது நாட்டிற்கு கொண்டு சென்றது .

கடந்த செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 20) அதிகாலை புவெனஸ் அயர்ஸில் அர்ஜென்டினா அணியின் தலைவர் மெஸ்ஸி தனது அணியுடன் வந்து சேர்ந்தார்.

நாட்டில் உள்ள தங்களது ரசிகர்களை காண வென்ற கோப்பையோடு திறந்த-மேல்பகுதி கொண்ட பேருந்தில் அணிவகுப்பைத் தொடங்கினர்.

மெஸ்ஸி, வலதுபுறத்தில் லியாண்ட்ரோ பரேடிஸ் மற்றும் ரோட்ரிகோ டி பால் மற்றும் இடதுபுறத்தில் ஏஞ்சல் டி மரியா மற்றும் நிக்கோலஸ் ஓட்டமெண்டி ஆகியோர் பேருந்தின் மேல் அமர்ந்து ரசிகர்களுக்கு கையசைத்து வண்ணம் வந்தனர். ​​

வீரர்கள் அனைவரும் கூட்டத்தை நோக்கி கோப்பையை காட்டியபடி வந்ததுகொண்டு இருந்தனர்.

அந்த நேரத்தில் பஸ் இடதுபுறம் திரும்பும் போது, சாலையின் குறுக்கே சென்ற ​​ஒரு கேபிள் அவர்கள் மீது அபாயகரமாக மோதும் வகையில் இருந்துள்ளது.

சரியான நேரத்தில் ஐந்து அர்ஜென்டினா வீரர்களும் இதை கவனித்து குனிந்ததால் விபத்தில் இருந்து தப்பித்துள்ளனர்.

இல்லையேல் இது அனைவரையும் பெரும் விபத்துக்கு உள்ளாக்கி இருக்கும்.

இதை கவனிக்காத பரேடிஸ் என்ற வீரரின் தொப்பி கேபிளில் பட்டு பறந்தது.

இந்தக் கவனக்குறைவுக்கு கால்பந்து ரசிகர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்த பேருந்து அணிவகுப்பு இறுதியில் அர்ஜென்டினாவின் கால்பந்து அஸோஸியேசன் வளாகத்தை அதிகாலை 4:18 மணிக்கு வந்தடைந்தது.

வீரர்களை காண லட்சக்கணக்கான ரசிகர்கள் பேருந்து செல்லும் சாலையில் குழுமி இருந்ததனால்.

அந்த நாள் பகலிலும் ரசிகர்கள் வெற்றி அடைந்த வீரர்களை காண ஆர்வமாக வந்த வண்ணம் இருந்தனர்.

35 வயதான மெஸ்ஸி இந்த உலகக்கோப்பை தான் தனது கடைசி விளையாட்டாக இருக்கும் என்று சொல்லிருந்த நிலையில் இந்த வெற்றி அவரை மேலும் ஊக்குவித்துள்ளது.

தனது பேட்டி ஒன்றில் மெஸ்ஸி, 'தேசிய அணியில், குழுவில் இருப்பதை நான் ரசிக்கிறேன், இன்னும் சில ஆட்டங்களில் தொடர்ந்து விளையாட விரும்புகிறேன்.

உலக சாம்பியனாக இருப்பது ஒவ்வொரு சிறு குழந்தையின் கனவு.

அதை சாதித்ததில் நான் அதிர்ஷ்டசாலி, நான் வேண்டியது இங்கே உள்ளது. மகிழ்ச்சியாக இருக்கிறேன்' என்று கூறியுள்ளார்.

கட்டார் உலகக் கோப்பையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதற்காக லியோனல் மெஸ்ஸிக்கு FIFA கோல்டன் பால் விருது வழங்கப்பட்டது.

அவர் ஏழு ஆட்டங்களில் ஏழு கோல்களை அடித்ததோடு உலகக் கோப்பையில் அனைத்து நாக் அவுட் ஆட்டங்களிலும் கோல் அடித்த முதல் வீரர் ஆனார்.

இந்நிலையில், மேலும் சில காலம் அவர் கால்பந்தாட்டங்களில் விளையாடுவர் என்ற மகிழ்ச்சியில் கால்பந்தாட்ட ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

மெஸ்ஸியின் உயிருக்கு ஆபத்து FIFA கால்பந்து போட்டியில் அர்ஜென்டினா வென்றதை அடுத்து அர்ஜென்டினா வீரர்கள் கோப்பையுடன்   ரசிகர்களை பார்க்க நடைபெற்ற ஓப்பன்-டாப் பேருந்து அணிவகுப்பில் அர்ஜென்டினா கேப்டன் லியோனல் மெஸ்ஸி, கணநேரத்தில் விபத்தில் இருந்து தப்பித்துள்ளார்.கடந்த ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 18) நடந்த இறுதிப் போட்டியில் கூடுதல் நேரத்திற்குப் பிறகு அர்ஜென்டினா 4-2 என்ற கோல் கணக்கில் பிரான்சை வீழ்த்தி மூன்றாவது FIFA உலகக் கோப்பையை வென்று தனது நாட்டிற்கு கொண்டு சென்றது .கடந்த செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 20) அதிகாலை புவெனஸ் அயர்ஸில் அர்ஜென்டினா அணியின் தலைவர் மெஸ்ஸி தனது அணியுடன் வந்து சேர்ந்தார். நாட்டில் உள்ள தங்களது ரசிகர்களை காண வென்ற கோப்பையோடு திறந்த-மேல்பகுதி கொண்ட பேருந்தில் அணிவகுப்பைத் தொடங்கினர்.மெஸ்ஸி, வலதுபுறத்தில் லியாண்ட்ரோ பரேடிஸ் மற்றும் ரோட்ரிகோ டி பால் மற்றும் இடதுபுறத்தில் ஏஞ்சல் டி மரியா மற்றும் நிக்கோலஸ் ஓட்டமெண்டி ஆகியோர் பேருந்தின் மேல் அமர்ந்து ரசிகர்களுக்கு கையசைத்து வண்ணம் வந்தனர். ​​வீரர்கள் அனைவரும் கூட்டத்தை நோக்கி கோப்பையை காட்டியபடி வந்ததுகொண்டு இருந்தனர். அந்த நேரத்தில் பஸ் இடதுபுறம் திரும்பும் போது, சாலையின் குறுக்கே சென்ற ​​ஒரு கேபிள் அவர்கள் மீது அபாயகரமாக மோதும் வகையில் இருந்துள்ளது.சரியான நேரத்தில் ஐந்து அர்ஜென்டினா வீரர்களும் இதை கவனித்து குனிந்ததால் விபத்தில் இருந்து தப்பித்துள்ளனர். இல்லையேல் இது அனைவரையும் பெரும் விபத்துக்கு உள்ளாக்கி இருக்கும். இதை கவனிக்காத பரேடிஸ் என்ற வீரரின் தொப்பி கேபிளில் பட்டு பறந்தது. இந்தக் கவனக்குறைவுக்கு கால்பந்து ரசிகர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.இந்த பேருந்து அணிவகுப்பு இறுதியில் அர்ஜென்டினாவின் கால்பந்து அஸோஸியேசன் வளாகத்தை அதிகாலை 4:18 மணிக்கு வந்தடைந்தது.வீரர்களை காண லட்சக்கணக்கான ரசிகர்கள் பேருந்து செல்லும் சாலையில் குழுமி இருந்ததனால்.அந்த நாள் பகலிலும் ரசிகர்கள் வெற்றி அடைந்த வீரர்களை காண ஆர்வமாக வந்த வண்ணம் இருந்தனர்.35 வயதான மெஸ்ஸி இந்த உலகக்கோப்பை தான் தனது கடைசி விளையாட்டாக இருக்கும் என்று சொல்லிருந்த நிலையில் இந்த வெற்றி அவரை மேலும் ஊக்குவித்துள்ளது. தனது பேட்டி ஒன்றில் மெஸ்ஸி, 'தேசிய அணியில், குழுவில் இருப்பதை நான் ரசிக்கிறேன், இன்னும் சில ஆட்டங்களில் தொடர்ந்து விளையாட விரும்புகிறேன். உலக சாம்பியனாக இருப்பது ஒவ்வொரு சிறு குழந்தையின் கனவு. அதை சாதித்ததில் நான் அதிர்ஷ்டசாலி, நான் வேண்டியது இங்கே உள்ளது. மகிழ்ச்சியாக இருக்கிறேன்' என்று கூறியுள்ளார்.கட்டார் உலகக் கோப்பையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதற்காக லியோனல் மெஸ்ஸிக்கு FIFA கோல்டன் பால் விருது வழங்கப்பட்டது. அவர் ஏழு ஆட்டங்களில் ஏழு கோல்களை அடித்ததோடு உலகக் கோப்பையில் அனைத்து நாக் அவுட் ஆட்டங்களிலும் கோல் அடித்த முதல் வீரர் ஆனார்.இந்நிலையில், மேலும் சில காலம் அவர் கால்பந்தாட்டங்களில் விளையாடுவர் என்ற மகிழ்ச்சியில் கால்பந்தாட்ட ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement