• Nov 26 2024

யாழில் இடம்பெற்ற எம்.ஜீ.ஆரின்(MGR) 107 ஆவது ஜனன தின நினைவேந்தல் நிகழ்வு...!samugammedia

Sharmi / Jan 18th 2024, 1:54 pm
image

தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரும் மறைந்த நடிகருமான மருது கோபாலன் இராமச்சந்திரன் எனப்படும் எம்.ஜீ.ஆரின் (MGR) 107 ஆவது ஜனனதின நிகழ்வு நேற்றையதினம்(17)  யாழ் வடமராட்சி பகுதியில் இடம்பெற்றது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

யாழ்ப்பாணம் வல்வை ஆதிகோவிலடி எம்.ஜி.ஆர் நற்பணி மன்றத்தின் ஏற்பாட்டில், மறைந்த நடிகரும் முதலமைச்சருமான எம்.ஜீ.ஆரின் 107 ஆவது ஜனனதின நிகழ்வு நேற்றையதினம் வல்வெட்டித்துறையில் அமைந்துள்ள M.G.R சதுக்கத்தில் நடைபெற்றது.

வல்வை ஆதிகோவிலடி எம்.ஜி.ஆர் நற்பணி மன்றத்தின் தலைவர் க.ஜெயராஜ் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் முதன்மை விருந்தினராக முன்னாள் வல்வெட்டித்துறையின் நகரசபையின் நகரமுதல்வர் ம. சுந்தரலிங்கம் கலந்துகொண்டு சிறப்பித்தார்.

107 ஆவது ஜனனதின நினைவேந்தலில் MGR சிலைக்கு மலர்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் நினைவேந்தல் உரையும் நிகழ்த்தப்பட்டது.

 கவிதைகள், பாடல்கள், சிறுகதை என்பன இதன்போது இடம்பெற்றது.

அதேவேளை  எம்.ஜி.ஆரின் 107ஆவது பிறந்த தின நிகழ்வின் முன்னிட்டு யாழ்ப்பாணம் வல்வை ஆதிகோவிலடி எம்.ஜி.ஆர்  நற்பணி மன்றத்தினால், பொருளாதார ரீதியாக பின்தாங்கிய நிலையில் உள்ள மாணவர்களின் கல்விக்கான அப்பியாசப்கொப்பிகளும், பாடநூல்களும் 107 மாணவர்களுக்கு வழங்கப்பட்டன.

இதில் யாழ்ப்பாணம் வல்வை ஆதிகோவிலடி எம்.ஜி.ஆர் நற்பணி மன்றத்தின் உப தலைவர்,செயலாளர், பொருளாளர், உள்ளிட்ட மன்ற உறுப்பினர்கள், பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.



யாழில் இடம்பெற்ற எம்.ஜீ.ஆரின்(MGR) 107 ஆவது ஜனன தின நினைவேந்தல் நிகழ்வு.samugammedia தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரும் மறைந்த நடிகருமான மருது கோபாலன் இராமச்சந்திரன் எனப்படும் எம்.ஜீ.ஆரின் (MGR) 107 ஆவது ஜனனதின நிகழ்வு நேற்றையதினம்(17)  யாழ் வடமராட்சி பகுதியில் இடம்பெற்றது.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,யாழ்ப்பாணம் வல்வை ஆதிகோவிலடி எம்.ஜி.ஆர் நற்பணி மன்றத்தின் ஏற்பாட்டில், மறைந்த நடிகரும் முதலமைச்சருமான எம்.ஜீ.ஆரின் 107 ஆவது ஜனனதின நிகழ்வு நேற்றையதினம் வல்வெட்டித்துறையில் அமைந்துள்ள M.G.R சதுக்கத்தில் நடைபெற்றது.வல்வை ஆதிகோவிலடி எம்.ஜி.ஆர் நற்பணி மன்றத்தின் தலைவர் க.ஜெயராஜ் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் முதன்மை விருந்தினராக முன்னாள் வல்வெட்டித்துறையின் நகரசபையின் நகரமுதல்வர் ம. சுந்தரலிங்கம் கலந்துகொண்டு சிறப்பித்தார்.107 ஆவது ஜனனதின நினைவேந்தலில் MGR சிலைக்கு மலர்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் நினைவேந்தல் உரையும் நிகழ்த்தப்பட்டது. கவிதைகள், பாடல்கள், சிறுகதை என்பன இதன்போது இடம்பெற்றது.அதேவேளை  எம்.ஜி.ஆரின் 107ஆவது பிறந்த தின நிகழ்வின் முன்னிட்டு யாழ்ப்பாணம் வல்வை ஆதிகோவிலடி எம்.ஜி.ஆர்  நற்பணி மன்றத்தினால், பொருளாதார ரீதியாக பின்தாங்கிய நிலையில் உள்ள மாணவர்களின் கல்விக்கான அப்பியாசப்கொப்பிகளும், பாடநூல்களும் 107 மாணவர்களுக்கு வழங்கப்பட்டன.இதில் யாழ்ப்பாணம் வல்வை ஆதிகோவிலடி எம்.ஜி.ஆர் நற்பணி மன்றத்தின் உப தலைவர்,செயலாளர், பொருளாளர், உள்ளிட்ட மன்ற உறுப்பினர்கள், பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement