• Jul 05 2025

சோமாலியாவில் இராணுவ ஹெலிகொப்டர் விபத்து - ஐவர் உயிரிழப்பு!

shanuja / Jul 3rd 2025, 10:54 am
image

சோமாலிய தலைநகர் மொகடிஷுவில் இடம்பெற்ற ஹெலிகொப்டர் விபத்தில் ஐவர் உயிரிழந்துள்ளனர். 

 

சோமாலிய தலைநகரில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் 8 ஆபிரிக்க யூனியன் அமைதிப் படையினரை ஏற்றிச் சென்ற  ஹெலிகொப்டரே இவ்வாறு விபத்துக்குள்ளானது. 


 

பயங்கரவாத குழுவை ஒழிக்க வெளிநாட்டு படைகள் சோமாலியா அரசுப்படையுடன் இணைந்து செயல்பட்டு வருகின்றன.



இந்த நிலையில், அந்நாட்டின் லொயர் ஷபெலில் மாகாணத்தில் இருந்து தலைநகர் மொகாதிசுவில் உள்ள விமான நிலையத்திற்கு  நேற்று  இராணுவ ஹெலிகொப்டர்  சென்றது. 


அந்த ஹெலிகொப்டரில் ஆபிரிக்க யூனியன் அமைதிப்படையின் இராணுவ வீரர்கள் பயணித்தனர். ஹெலிகொப்டர் விமான நிலையத்தில் தரையிறங்க முயற்சித்தபோது எதிர்பாராத விதமாக தரையில் விழுந்து விபத்துக்குள்ளானது.



இந்த சம்பவத்தில் ஹெலிகொப்டரில் பயணித்த இராணுவ வீரர்கள்  ஐவர் உயிரிழந்தனர். விபத்து தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சோமாலியாவில் இராணுவ ஹெலிகொப்டர் விபத்து - ஐவர் உயிரிழப்பு சோமாலிய தலைநகர் மொகடிஷுவில் இடம்பெற்ற ஹெலிகொப்டர் விபத்தில் ஐவர் உயிரிழந்துள்ளனர்.  சோமாலிய தலைநகரில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் 8 ஆபிரிக்க யூனியன் அமைதிப் படையினரை ஏற்றிச் சென்ற  ஹெலிகொப்டரே இவ்வாறு விபத்துக்குள்ளானது.  பயங்கரவாத குழுவை ஒழிக்க வெளிநாட்டு படைகள் சோமாலியா அரசுப்படையுடன் இணைந்து செயல்பட்டு வருகின்றன.இந்த நிலையில், அந்நாட்டின் லொயர் ஷபெலில் மாகாணத்தில் இருந்து தலைநகர் மொகாதிசுவில் உள்ள விமான நிலையத்திற்கு  நேற்று  இராணுவ ஹெலிகொப்டர்  சென்றது. அந்த ஹெலிகொப்டரில் ஆபிரிக்க யூனியன் அமைதிப்படையின் இராணுவ வீரர்கள் பயணித்தனர். ஹெலிகொப்டர் விமான நிலையத்தில் தரையிறங்க முயற்சித்தபோது எதிர்பாராத விதமாக தரையில் விழுந்து விபத்துக்குள்ளானது.இந்த சம்பவத்தில் ஹெலிகொப்டரில் பயணித்த இராணுவ வீரர்கள்  ஐவர் உயிரிழந்தனர். விபத்து தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement