• May 11 2024

வரி அறவீட்டில் இராணுவ வீரர்களுக்கு விலக்களிக்க வேண்டும்- சபையில் விமல் கோரிக்கை!

Sharmi / Jan 5th 2023, 2:44 pm
image

Advertisement

அரசாங்கம் தற்போது விதித்துள்ள வரி அறவீட்டில் இருந்து இராணுவ வீரர்களுக்கு விலக்களிக்க வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச வலியுறுத்தியுள்ளார்.

விடுதலைப்புலிகளுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் போது அங்கவீனமடைந்த இராணுவ வீரர்கள் பலர் உள்ளதாகவும் எனவே தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள வரி அறவீட்டை அரசு நீக்கவேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இன்றைய நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து உரையாற்றுகையில்,

பாதிக்கப்பட்ட இராணுவ வீரர்கள் இரண்டு கோரிக்கையை முன்வைத்துள்ளதாகவும் அவர்கள் குடும்பங்களை நடத்துவதில் பரிய சிக்கலை எதிர் நோக்குவதாவும்  அவர்களிடமிருந்து வரிகளை அறவிடக்கூடாது என்றும் நாடாளுமன்றத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதேவேளை பொதுஜன பெரமுன நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பொன்றில் முன்னாள் அமைச்சருமான சந்திரசேன கருத்து தெரிவிக்கும் போது, 

சாதாரண மக்களை விட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கே வரி என்ற வலை விரிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார். பொதுமக்களை விட அரசியல்வாதிகளே முன்னுதாரணமாக திகழவேண்டும் இவ்வாறு நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் வரியை அறவிடுவது வருமான வரிகளை அறவிடும் அதிகாரிகளின் கட்டாய கடமையாகும்.  ஜனாதிபதி, பிரதமர், அமைச்சரக்ள் உட்பட அனைத்து மக்கள் பிரதிநிதிகளும் வரி செலுத்த வேண்டும் எனவும் தெரிவித்தார்.

வரி அறவீட்டில் இராணுவ வீரர்களுக்கு விலக்களிக்க வேண்டும்- சபையில் விமல் கோரிக்கை அரசாங்கம் தற்போது விதித்துள்ள வரி அறவீட்டில் இருந்து இராணுவ வீரர்களுக்கு விலக்களிக்க வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச வலியுறுத்தியுள்ளார்.விடுதலைப்புலிகளுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் போது அங்கவீனமடைந்த இராணுவ வீரர்கள் பலர் உள்ளதாகவும் எனவே தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள வரி அறவீட்டை அரசு நீக்கவேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.இன்றைய நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.தொடர்ந்து உரையாற்றுகையில்,பாதிக்கப்பட்ட இராணுவ வீரர்கள் இரண்டு கோரிக்கையை முன்வைத்துள்ளதாகவும் அவர்கள் குடும்பங்களை நடத்துவதில் பரிய சிக்கலை எதிர் நோக்குவதாகவும்  அவர்களிடமிருந்து வரிகளை அறவிடக்கூடாது என்றும் நாடாளுமன்றத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.இதேவேளை பொதுஜன பெரமுன நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பொன்றில் முன்னாள் அமைச்சருமான சந்திரசேன கருத்து தெரிவிக்கும் போது, சாதாரண மக்களை விட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கே வரி என்ற வலை விரிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார். பொதுமக்களை விட அரசியல்வாதிகளே முன்னுதாரணமாக திகழவேண்டும் இவ்வாறு நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் வரியை அறவிடுவது வருமான வரிகளை அறவிடும் அதிகாரிகளின் கட்டாய கடமையாகும்.  ஜனாதிபதி, பிரதமர், அமைச்சரக்ள் உட்பட அனைத்து மக்கள் பிரதிநிதிகளும் வரி செலுத்த வேண்டும் எனவும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement