• May 19 2024

இனப்பிரச்சனை தீர்வுக்கான முன்னெடுப்புகளை குழப்ப முனையும் முஸ்லீம் தரப்புகள்- சபையில் ஹகீம் ஆதங்கம்!

Sharmi / Jan 5th 2023, 2:58 pm
image

Advertisement

இனப்பிரச்சனை தீர்வுக்கான முன்னெடுப்புகள் தற்போது நடைபெற்று வருகின்ற நிலையில் அதனை குழப்புவதற்கு சில முஸ்லீம் தரப்புகள் முனைவதாக முஸ்லீம் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹகீம் குற்றம் சுமத்தியுள்ளார்.

இன்று நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற விவாதத்தில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குற்றம் சுமத்தியிருந்தார்.

அண்மைக்காலமாக புதிய ஜனாதிபதி அரசியலமைப்பு திருத்தம் காரணமாகவும் ,நாட்டின் இனப்பிரச்சினை தீர்வு சம்மந்தமாகவும் இந்த நாட்டின் தமிழ் அரசியல் கட்சிகளோடு குறிப்பாக தமிழ் கூட்டமைப்பு கட்சியுடன் பேச்சுவார்த்தையினை ஆரம்பித்திருப்பது வரவேற்கத்தக்க விடயம் என்று கூறும் அதேவேளை இது சம்மந்தமாக விசமத்தனமான பிரச்சாரங்கள் இன்று சக தமிழ் பேசும் சமூகமான முஸ்லீம்கள் மத்தியில் கொண்டு செல்ல வைத்தது மிகவும் வருத்தமான விடயம்.

இனப்பிரச்சினை தீர்வு குறித்து தமிழ் மக்களுடைய அபிலாசைகள் என்பது சில சமயங்களில் இமுஸ்லீம்களின் அபிலாசைகளோடு முரண்பட்டதாக இருக்கும் போது தேவையற்ற சந்தேகங்களை கிளப்பி ஒட்டுமொத்தமாக இனப்பிரச்சினைக்கான தீர்வு வருகின்ற சாத்தியப்பாட்டை குறைப்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படுவதாக நான் உணர்கின்றேன்.

அந்த அடிப்படையில் குறிப்பாக வட கிழக்கு இமுழு பிரதேசத்தையும் ஒரு அரசியல் அரசாக ஆக்கி தர வேண்டும் என்ற கோரிக்கை தமிழர் தரப்பில் நீண்ட காலமாக இருந்து வந்த போதிலும் அதிலே முஸ்லீம் தரப்பு சற்று மாற்றமான கருத்தை கொண்டிருக்கிறது என்ற யதார்த்தத்தை தமிழ் தரப்பு புரிந்திருக்கும் என்பதனை நாங்கள் முழுமையாக உணர்ந்திருக்கிறோம்.

அந்த அடிப்படியில் இந்த விவகாரத்தில் தேவையற்ற விசமத்தனமான பிரச்சாரங்களை மேற்கொள்ளாமல் அரசாங்கமோஇதமிழ் தரப்போ இந்த பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கின்ற போது இந்த விவகாரத்தில் கரிசனையுடைய ஏனைய தரப்புக்களை இணைத்துக்கொண்டு இதற்கான தீர்வினை காண்பார்கள் என்பதில் நாங்கள் நம்பிக்கையோடு இருக்கிறோம்.

எனவே ஒரு தீர்வு வருகின்ற பொழுது இஒரு பிரச்சினைக்கான தீர்வு வருகின்ற நிலையில் அத விவகாரத்தை இவ்வாறான விசமத்தனமான பிரச்சாரங்கள் மூலம் குழப்பியடிக்க முனையாமல் இணக்கப்பாட்டோடு பேச்சுவார்த்தையின் மூலம் தீர்ப்பதிலே தான் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் போன்ற கட்சிகள் நம்பிக்கையோடு இருக்கின்றன என்று சொல்லி ஆக வேண்டும் என தெரிவித்தார்.


இனப்பிரச்சனை தீர்வுக்கான முன்னெடுப்புகளை குழப்ப முனையும் முஸ்லீம் தரப்புகள்- சபையில் ஹகீம் ஆதங்கம் இனப்பிரச்சனை தீர்வுக்கான முன்னெடுப்புகள் தற்போது நடைபெற்று வருகின்ற நிலையில் அதனை குழப்புவதற்கு சில முஸ்லீம் தரப்புகள் முனைவதாக முஸ்லீம் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹகீம் குற்றம் சுமத்தியுள்ளார்.இன்று நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற விவாதத்தில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குற்றம் சுமத்தியிருந்தார்.அண்மைக்காலமாக புதிய ஜனாதிபதி அரசியலமைப்பு திருத்தம் காரணமாகவும் ,நாட்டின் இனப்பிரச்சினை தீர்வு சம்மந்தமாகவும் இந்த நாட்டின் தமிழ் அரசியல் கட்சிகளோடு குறிப்பாக தமிழ் கூட்டமைப்பு கட்சியுடன் பேச்சுவார்த்தையினை ஆரம்பித்திருப்பது வரவேற்கத்தக்க விடயம் என்று கூறும் அதேவேளை இது சம்மந்தமாக விசமத்தனமான பிரச்சாரங்கள் இன்று சக தமிழ் பேசும் சமூகமான முஸ்லீம்கள் மத்தியில் கொண்டு செல்ல வைத்தது மிகவும் வருத்தமான விடயம்.இனப்பிரச்சினை தீர்வு குறித்து தமிழ் மக்களுடைய அபிலாசைகள் என்பது சில சமயங்களில் இமுஸ்லீம்களின் அபிலாசைகளோடு முரண்பட்டதாக இருக்கும் போது தேவையற்ற சந்தேகங்களை கிளப்பி ஒட்டுமொத்தமாக இனப்பிரச்சினைக்கான தீர்வு வருகின்ற சாத்தியப்பாட்டை குறைப்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படுவதாக நான் உணர்கின்றேன்.அந்த அடிப்படையில் குறிப்பாக வட கிழக்கு இமுழு பிரதேசத்தையும் ஒரு அரசியல் அரசாக ஆக்கி தர வேண்டும் என்ற கோரிக்கை தமிழர் தரப்பில் நீண்ட காலமாக இருந்து வந்த போதிலும் அதிலே முஸ்லீம் தரப்பு சற்று மாற்றமான கருத்தை கொண்டிருக்கிறது என்ற யதார்த்தத்தை தமிழ் தரப்பு புரிந்திருக்கும் என்பதனை நாங்கள் முழுமையாக உணர்ந்திருக்கிறோம்.அந்த அடிப்படியில் இந்த விவகாரத்தில் தேவையற்ற விசமத்தனமான பிரச்சாரங்களை மேற்கொள்ளாமல் அரசாங்கமோஇதமிழ் தரப்போ இந்த பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கின்ற போது இந்த விவகாரத்தில் கரிசனையுடைய ஏனைய தரப்புக்களை இணைத்துக்கொண்டு இதற்கான தீர்வினை காண்பார்கள் என்பதில் நாங்கள் நம்பிக்கையோடு இருக்கிறோம்.எனவே ஒரு தீர்வு வருகின்ற பொழுது இஒரு பிரச்சினைக்கான தீர்வு வருகின்ற நிலையில் அத விவகாரத்தை இவ்வாறான விசமத்தனமான பிரச்சாரங்கள் மூலம் குழப்பியடிக்க முனையாமல் இணக்கப்பாட்டோடு பேச்சுவார்த்தையின் மூலம் தீர்ப்பதிலே தான் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் போன்ற கட்சிகள் நம்பிக்கையோடு இருக்கின்றன என்று சொல்லி ஆக வேண்டும் என தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement