• May 19 2024

ஆளுநர் தெரிவு - அரசுக்கு அட்வைஸ் கொடுக்கும் எதிர்க்கட்சி

Chithra / Jan 5th 2023, 3:01 pm
image

Advertisement

மாகாண சபைகளுக்கான ஆளுநர்களை தெரிவு செய்யும் போது அரசாங்கம் அதிக கவனம் எடுக்கவேண்டுமென ஜக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார்.

இன்றைய நாடாளுமன்ற அமர்வில் மேல் மாகாண சபையின் ஆளுநரின் அடாவடி நடவடிக்கை தொடர்பாக பொலிசில் முறைபாடு செய்துள்ளதாகவும் அவரை உடனடியாக மாற்றுமாறு அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்திருந்தர்.

1948 தொடக்கம் பல அரசாங்கம் ஆட்சி செய்ததாகவும் அவ்வாறு ஆட்சி செய்தவர்களே இன்று இந்த நாட்டை வங்குரோத்து நிலைக்கு தள்ளியதாக அவர் குற்றம் சுமத்தினார்.

தற்போதைய தேர்தலை தொடர்ந்து மாகாண சபை தேர்தலையும் அரசாங்கம் உடனடியாக நடத்தவேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

அதிகாரங்கள் ஆளுநர் என்ற தனிநபரிடம் உள்ளதாகவும் மாகாண சபைகள் இயங்காத நிலையில் காணப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

மாகாண சபைகள் இயங்காத காரணத்தினால் இவ்வாறான ஆளுநர்கள் தன்னிச்சையாக செயற்படுவதாகவும் லக்ஸ்மன் கிரியல்ல சுட்டிக்காட்டியிருந்தார்.

ஆளுநர் தெரிவு - அரசுக்கு அட்வைஸ் கொடுக்கும் எதிர்க்கட்சி மாகாண சபைகளுக்கான ஆளுநர்களை தெரிவு செய்யும் போது அரசாங்கம் அதிக கவனம் எடுக்கவேண்டுமென ஜக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார்.இன்றைய நாடாளுமன்ற அமர்வில் மேல் மாகாண சபையின் ஆளுநரின் அடாவடி நடவடிக்கை தொடர்பாக பொலிசில் முறைபாடு செய்துள்ளதாகவும் அவரை உடனடியாக மாற்றுமாறு அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்திருந்தர்.1948 தொடக்கம் பல அரசாங்கம் ஆட்சி செய்ததாகவும் அவ்வாறு ஆட்சி செய்தவர்களே இன்று இந்த நாட்டை வங்குரோத்து நிலைக்கு தள்ளியதாக அவர் குற்றம் சுமத்தினார்.தற்போதைய தேர்தலை தொடர்ந்து மாகாண சபை தேர்தலையும் அரசாங்கம் உடனடியாக நடத்தவேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.அதிகாரங்கள் ஆளுநர் என்ற தனிநபரிடம் உள்ளதாகவும் மாகாண சபைகள் இயங்காத நிலையில் காணப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.மாகாண சபைகள் இயங்காத காரணத்தினால் இவ்வாறான ஆளுநர்கள் தன்னிச்சையாக செயற்படுவதாகவும் லக்ஸ்மன் கிரியல்ல சுட்டிக்காட்டியிருந்தார்.

Advertisement

Advertisement

Advertisement