• May 17 2024

அரசாங்கத்திற்கு எதிராக வீதிக்கு இறங்கவுள்ள இலட்சக்கணக்கான மக்கள்- முக்கிய நபரின் கருத்தால் பரபரப்பு!

Sharmi / Dec 13th 2022, 5:02 pm
image

Advertisement

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அரசியலமைப்புச் சீர்கேடுகளின் ஊடாக தேர்தலை ஒத்திவைக்கத் தீர்மானித்தால் ஜனவரி மாதம் இலட்சக்கணக்கான மக்கள் வீதிக்கு இறங்குவார்கள் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.பி எஸ். எம். மரிக்கார் கொழும்பில் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

மக்கள் அதிகாரத்தை இராணுவம் மற்றும் பொலிஸாரால் அடக்க முடியாது என்பதை ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் வலியுறுத்தி வருவதாகவும்  குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான அரசாங்கம் அமைப்பாளர்களை நியமிப்பதற்கும் வேட்பாளர்களைத் தேடுவதற்கும் இயலாமைக்கு நாட்டு மக்களாலும் எதிர்க்கட்சிகளாலும் ஒன்றும் செய்ய முடியாது என கொழும்பு மார்க்ஸ் பெர்னாண்டோ மாவத்தையில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் தெரிவித்தார்.

தோற்கடிக்கப்படுவோம் என்று தெரிந்தும் தேர்தலை ஒத்திவைக்க அரசாங்கம் பல்வேறு யுக்திகளை கையாண்டு வருவதாகவும், மக்கள் மற்றும் தேர்தலுக்கு பயந்து தேர்தலை நடத்தாதது ஜனநாயக கோட்பாடுகளுக்கு பாரிய சேதம் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

அரசாங்கத்திற்கு எதிராக வீதிக்கு இறங்கவுள்ள இலட்சக்கணக்கான மக்கள்- முக்கிய நபரின் கருத்தால் பரபரப்பு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அரசியலமைப்புச் சீர்கேடுகளின் ஊடாக தேர்தலை ஒத்திவைக்கத் தீர்மானித்தால் ஜனவரி மாதம் இலட்சக்கணக்கான மக்கள் வீதிக்கு இறங்குவார்கள் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.பி எஸ். எம். மரிக்கார் கொழும்பில் தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,மக்கள் அதிகாரத்தை இராணுவம் மற்றும் பொலிஸாரால் அடக்க முடியாது என்பதை ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் வலியுறுத்தி வருவதாகவும்  குறிப்பிட்டுள்ளார்.ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான அரசாங்கம் அமைப்பாளர்களை நியமிப்பதற்கும் வேட்பாளர்களைத் தேடுவதற்கும் இயலாமைக்கு நாட்டு மக்களாலும் எதிர்க்கட்சிகளாலும் ஒன்றும் செய்ய முடியாது என கொழும்பு மார்க்ஸ் பெர்னாண்டோ மாவத்தையில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் தெரிவித்தார்.தோற்கடிக்கப்படுவோம் என்று தெரிந்தும் தேர்தலை ஒத்திவைக்க அரசாங்கம் பல்வேறு யுக்திகளை கையாண்டு வருவதாகவும், மக்கள் மற்றும் தேர்தலுக்கு பயந்து தேர்தலை நடத்தாதது ஜனநாயக கோட்பாடுகளுக்கு பாரிய சேதம் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement