சம்மாந்துறை பிரதேச செலக பிரிவில் உள்ள மூன்று கிராம சேவகர் பிரிவுகளில் இன்று மாலை 5.30 மணியளவில் வீசிய மினி சூறாவளி காரணமாக பல இடங்களில் மின்சார கம்பிகள் துண்டிக்கப்பட்டுள்ளதால் பல வீடுகள் பாதிப்படைந்துள்ளன.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,,
கல்லரிச்சல் 2, 3 மற்றும் புளக் ஜே வெஸ்ட் 3 கிராம சேவை பிரிவுகள் அடங்களாக மூன்று கிராம சேவையாளர் பிரிவுகளில் 18 குடும்பங்களைச் சேர்ந்த 75 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சுமார் 18 வீடுகளுக்கு மேல் முழுமையாக சேதமடைந்துள்ளதுடன் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த பலர் சம்மாந்துறை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
களத்தில் சம்மாந்துறை பிரதேச செயலக உத்தியோகத்தகர்கள், மின்சார சபை ஊழியர்கள், பொலிஸ், இராணுவத்தோடு சம்மாந்துறை பிரதேச செயலக அனர்த்த முகாமைத்துவ குழுவினர் மக்களின் பாதுகாப்பு நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளனர் .
சம்மாந்துறை பிரதேசத்தில் கட்டம் கட்டமாக மின்சாரம் மீள வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மேலும், அல் அஸ்ஹர் வித்தியாலத்தில் மிகப் பழமை வாய்ந்த மரம் ஒன்றும் வீழ்ந்தமையால் கட்டிடங்களுக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.
சம்மாந்துறை பிரதேசத்தில் மினி சூறாவளி - மின்சாரம் துண்டிப்பு. Samugammedia சம்மாந்துறை பிரதேச செலக பிரிவில் உள்ள மூன்று கிராம சேவகர் பிரிவுகளில் இன்று மாலை 5.30 மணியளவில் வீசிய மினி சூறாவளி காரணமாக பல இடங்களில் மின்சார கம்பிகள் துண்டிக்கப்பட்டுள்ளதால் பல வீடுகள் பாதிப்படைந்துள்ளன.குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,,கல்லரிச்சல் 2, 3 மற்றும் புளக் ஜே வெஸ்ட் 3 கிராம சேவை பிரிவுகள் அடங்களாக மூன்று கிராம சேவையாளர் பிரிவுகளில் 18 குடும்பங்களைச் சேர்ந்த 75 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 18 வீடுகளுக்கு மேல் முழுமையாக சேதமடைந்துள்ளதுடன் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த பலர் சம்மாந்துறை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.களத்தில் சம்மாந்துறை பிரதேச செயலக உத்தியோகத்தகர்கள், மின்சார சபை ஊழியர்கள், பொலிஸ், இராணுவத்தோடு சம்மாந்துறை பிரதேச செயலக அனர்த்த முகாமைத்துவ குழுவினர் மக்களின் பாதுகாப்பு நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளனர் .சம்மாந்துறை பிரதேசத்தில் கட்டம் கட்டமாக மின்சாரம் மீள வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.மேலும், அல் அஸ்ஹர் வித்தியாலத்தில் மிகப் பழமை வாய்ந்த மரம் ஒன்றும் வீழ்ந்தமையால் கட்டிடங்களுக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.