ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராக போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
எந்தவித அறிவிப்பும் இன்றி ஹோமாகம பிரதேசத்தில் கூட்டமொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததன் மூலம் அவர் கட்சியின் ஒழுக்கத்தை மீறியுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன சுட்டிக்காட்டியுள்ளார்.
எவ்வாறாயினும், இது தொடர்பில் நடவடிக்கை எடுக்க முடியாது எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இதன்போது கருத்துத் தெரிவித்த நாமல் ராஜபக்ஷ,
முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஜானக வெலிவத்தவின் அழைப்பின் பேரில் அவரது வீட்டுக்குச் சென்றதாகத் தெரிவித்தார்.
அதன்படி அங்கு தேநீர் விருந்தில் பங்கேற்றதாகவும், கட்சியினர் பலர் தன்னை சந்திக்க வந்ததாகவும் தெரிவித்தார்.
அத்துடன், அண்மைக்காலமாக நெலும் மாவத்தையில் உள்ள கட்சி அலுவலகத்திற்கு கூட பந்துல குணவர்தன வரவில்லை எனவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நாமல் ராஜபக்சவுக்கு எதிராக பொலிஸ் நிலையம் சென்ற அமைச்சர் பந்துல. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராக போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.எந்தவித அறிவிப்பும் இன்றி ஹோமாகம பிரதேசத்தில் கூட்டமொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததன் மூலம் அவர் கட்சியின் ஒழுக்கத்தை மீறியுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன சுட்டிக்காட்டியுள்ளார்.எவ்வாறாயினும், இது தொடர்பில் நடவடிக்கை எடுக்க முடியாது எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.இதன்போது கருத்துத் தெரிவித்த நாமல் ராஜபக்ஷ, முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஜானக வெலிவத்தவின் அழைப்பின் பேரில் அவரது வீட்டுக்குச் சென்றதாகத் தெரிவித்தார்.அதன்படி அங்கு தேநீர் விருந்தில் பங்கேற்றதாகவும், கட்சியினர் பலர் தன்னை சந்திக்க வந்ததாகவும் தெரிவித்தார்.அத்துடன், அண்மைக்காலமாக நெலும் மாவத்தையில் உள்ள கட்சி அலுவலகத்திற்கு கூட பந்துல குணவர்தன வரவில்லை எனவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.