• Nov 28 2024

ஊழல் மோசடிகாரர்களை சட்டரீதியாக பாதுகாக்கும் அமைச்சர் ஹரின்..! ரொஷான் பகிரங்க குற்றச்சாட்டு

Chithra / Dec 19th 2023, 11:50 am
image

 

ஸ்ரீலங்கா கிரிக்கெட்டில் எழுந்துள்ள பிரச்சனைக்களுக்கு அடுத்த ஜனாதிபதி தேர்தல் இடம்பெறும் வரை தீர்வு காண முடியாது என முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.

இதனிடையே முதலில் ஊழல் மற்றும் மோசடிகாரர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும் எனவும் எதிர்காலத்தில்  சரியானவர்கள் நாட்டை பொறுப்பேற்று முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

சமகால அரசியல் நிலைவரம் தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே  மேற்கண்டவாறு தெரிவித்தார். 

மேலும் தேர்தலின் போது ஊழல் மோசடி தொடர்பில் தெளிவான கொள்கைகளை முன்வைக்க வேண்டும். அவை வெறும் வாக்குறுதிகளாக மாத்திரம் இருக்க கூடாது.

நல்லாட்சி அரசாங்கம் என கூறிக்கொண்டு மத்திய வங்கியை கொள்ளையடித்து சென்றதை போன்று இருக்க கூடாது. இந்த முறையும் இதுவே நடந்தது.

ஹரின் பெர்னாண்டோ போன்றவர்கள் காலி முகத்திடலில் சென்று ஊழல் மோசடிக்காரர்கள் தொடர்பில் கூச்சலிட்டார்கள். ஆனால் இறுதியில் என்ன நடந்தது. அவர்கள் ஊழல் மோசடிகாரர்களை சட்டரீதியாக பாதுகாக்கின்றனர்.

நாட்டின் ஆட்சி சர்வதேச நாணய நிதியத்திடமே இருக்கிறது. அவர்களின் நிபந்தனைக்கு அமையவே வரி அதிகரிக்கப்பட்டுள்ளது. 

இவ்வளவு வரியை சுமத்தும் போது ஊழல் மோசடி இடம்பெறுவது பெரும் பிரச்சினையாக உள்ளது. நிலக்கரி,எரிபொருள் கொள்வனவின் போது ஊழல் மோசடி இடம்பெற்றுள்ளதாக ஜனாதிபதியே கூறுகிறார்.

அப்படி என்றால் அரசாங்கம் ஒன்று தேவையில்லை அல்லவா? இவர்களை தேடி தண்டனை வழங்க வேண்டும். தேர்தல் நெருங்கும் போது காய் நகர்த்துவார்கள். எனவே சரியானவர்கள் பொறுப்பேற்று நாட்டை கொண்டு செல்ல வேண்டும் என்றார்.

ஊழல் மோசடிகாரர்களை சட்டரீதியாக பாதுகாக்கும் அமைச்சர் ஹரின். ரொஷான் பகிரங்க குற்றச்சாட்டு  ஸ்ரீலங்கா கிரிக்கெட்டில் எழுந்துள்ள பிரச்சனைக்களுக்கு அடுத்த ஜனாதிபதி தேர்தல் இடம்பெறும் வரை தீர்வு காண முடியாது என முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.இதனிடையே முதலில் ஊழல் மற்றும் மோசடிகாரர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும் எனவும் எதிர்காலத்தில்  சரியானவர்கள் நாட்டை பொறுப்பேற்று முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.சமகால அரசியல் நிலைவரம் தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே  மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் தேர்தலின் போது ஊழல் மோசடி தொடர்பில் தெளிவான கொள்கைகளை முன்வைக்க வேண்டும். அவை வெறும் வாக்குறுதிகளாக மாத்திரம் இருக்க கூடாது.நல்லாட்சி அரசாங்கம் என கூறிக்கொண்டு மத்திய வங்கியை கொள்ளையடித்து சென்றதை போன்று இருக்க கூடாது. இந்த முறையும் இதுவே நடந்தது.ஹரின் பெர்னாண்டோ போன்றவர்கள் காலி முகத்திடலில் சென்று ஊழல் மோசடிக்காரர்கள் தொடர்பில் கூச்சலிட்டார்கள். ஆனால் இறுதியில் என்ன நடந்தது. அவர்கள் ஊழல் மோசடிகாரர்களை சட்டரீதியாக பாதுகாக்கின்றனர்.நாட்டின் ஆட்சி சர்வதேச நாணய நிதியத்திடமே இருக்கிறது. அவர்களின் நிபந்தனைக்கு அமையவே வரி அதிகரிக்கப்பட்டுள்ளது. இவ்வளவு வரியை சுமத்தும் போது ஊழல் மோசடி இடம்பெறுவது பெரும் பிரச்சினையாக உள்ளது. நிலக்கரி,எரிபொருள் கொள்வனவின் போது ஊழல் மோசடி இடம்பெற்றுள்ளதாக ஜனாதிபதியே கூறுகிறார்.அப்படி என்றால் அரசாங்கம் ஒன்று தேவையில்லை அல்லவா இவர்களை தேடி தண்டனை வழங்க வேண்டும். தேர்தல் நெருங்கும் போது காய் நகர்த்துவார்கள். எனவே சரியானவர்கள் பொறுப்பேற்று நாட்டை கொண்டு செல்ல வேண்டும் என்றார்.

Advertisement

Advertisement

Advertisement