• Nov 24 2024

கண்டி லெவலன் புப்புரஸ்ஸ தோட்டத்திற்கு அமைச்சர் ஜீவன் நேரடி விஜயம்!

Tamil nila / Jun 15th 2024, 10:04 pm
image

கண்டி மாவட்டத்திற்கான களவிஜயத்தின் ஒரு பகுதியாக லெவலன் புப்புரஸ்ஸ தோட்டத்திற்கு நேற்று (14) நேரடி விஜயம் செய்த அமைச்சர் ஜீவண் தொண்டமான்.

லெவலன் தோட்டத்தைச் சேர்ந்த புபுரஸ்ஸ நடுப்பகுதியில் கடந்த அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட வீட்டுத்திட்டம் அரைகுறையாகக் காணப்பட்டு வந்தநிலையில் கட்டப்பட்ட ஐம்பது வீடுகளும் மண்சரிவு அபாயத்தில் உள்ள முப்பது வீடுகளையும் நேரடியாக விஜயம் மேற்கொண்டு பார்வையிட்டார்.

அப்பகுதியில் மண்சரிவு அபாயத்தில் உள்ள முப்பது வீடுகளுக்கும் மாற்றாக இந்திய அரசாங்கத்தின் வீட்டுத்திட்டத்தினூடாக வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மக்களிடம் எடுத்துறைத்தார்.

மேலும் அரைகுறையாக நிர்மாணிக்கப்பட்ட வீட்டுத்திட்டத்தினை பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, தனது அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் விரைவாக முன்னெடுக்குமாறு அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டதாகவும், பொதுமக்களிடம் தெளிவுப்படுத்தியதாகவும் கௌரவ அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்.

இந் நிகழ்வில் அமைச்சர் ஜீவன் தொண்டமான் உட்பட நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சர் அனுராதா ஜெயரத்ன, பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் தலைவர் பாரத் அருள்சாமி, இ.தொ.காவின் பிரதி பொதுச்செயலாளர் செல்லமுத்து, கண்டி மாவட்டத்திற்கு பொறுப்பான தேசிய வீடமைப்பு அதிகார சபையின் அதிகாரிகள் பொதுமக்கள் என பலரும் கலந்துக்கொண்டனர்.

கண்டி லெவலன் புப்புரஸ்ஸ தோட்டத்திற்கு அமைச்சர் ஜீவன் நேரடி விஜயம் கண்டி மாவட்டத்திற்கான களவிஜயத்தின் ஒரு பகுதியாக லெவலன் புப்புரஸ்ஸ தோட்டத்திற்கு நேற்று (14) நேரடி விஜயம் செய்த அமைச்சர் ஜீவண் தொண்டமான்.லெவலன் தோட்டத்தைச் சேர்ந்த புபுரஸ்ஸ நடுப்பகுதியில் கடந்த அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட வீட்டுத்திட்டம் அரைகுறையாகக் காணப்பட்டு வந்தநிலையில் கட்டப்பட்ட ஐம்பது வீடுகளும் மண்சரிவு அபாயத்தில் உள்ள முப்பது வீடுகளையும் நேரடியாக விஜயம் மேற்கொண்டு பார்வையிட்டார்.அப்பகுதியில் மண்சரிவு அபாயத்தில் உள்ள முப்பது வீடுகளுக்கும் மாற்றாக இந்திய அரசாங்கத்தின் வீட்டுத்திட்டத்தினூடாக வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மக்களிடம் எடுத்துறைத்தார்.மேலும் அரைகுறையாக நிர்மாணிக்கப்பட்ட வீட்டுத்திட்டத்தினை பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, தனது அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் விரைவாக முன்னெடுக்குமாறு அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டதாகவும், பொதுமக்களிடம் தெளிவுப்படுத்தியதாகவும் கௌரவ அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்.இந் நிகழ்வில் அமைச்சர் ஜீவன் தொண்டமான் உட்பட நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சர் அனுராதா ஜெயரத்ன, பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் தலைவர் பாரத் அருள்சாமி, இ.தொ.காவின் பிரதி பொதுச்செயலாளர் செல்லமுத்து, கண்டி மாவட்டத்திற்கு பொறுப்பான தேசிய வீடமைப்பு அதிகார சபையின் அதிகாரிகள் பொதுமக்கள் என பலரும் கலந்துக்கொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement