• Nov 25 2024

சிறு மற்றும் நடுத்தர வர்த்தகர்களுக்கு அமைச்சரின் அறிவிப்பு - நிதித் தேவைகளை பூர்த்தி செய்ய புதிய முறை

Chithra / Jan 21st 2024, 9:04 am
image

 

இந்த வருடத்தின் முதல் காலாண்டில் இந்நாட்டு நுண்நிதித்துறை ஒழுங்குபடுத்தப்படும் என பதில் நிதியமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த அவர், 

நுண்கடன் துறையில் அதிகளவு பயன்பெறுவது பெண்களே என தெரிவித்தார்.

சிறு மற்றும் நடுத்தர வர்த்தகர்களின் நிதித் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் உத்தரவாத முறையொன்று எதிர்வரும் காலங்களில் அறிமுகப்படுத்தப்படும் எனவும் பதில் நிதியமைச்சர் ஷெஹான் சேமசிங்க மேலும் குறிப்பிடுகின்றார்.

இதேவேளை, தேசிய சேமிப்பு வங்கிக்கு சொந்தமான பங்குகளை கொள்வனவு செய்வதற்கு மாத்திரமே ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்தின் மறுசீரமைப்புக்காக 1.3 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

குறித்த நிதி ஒதுக்கீடு தொடர்பில் பல்வேறு தரப்பினரும் தவறான தகவல்களை பரப்பி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

சிறு மற்றும் நடுத்தர வர்த்தகர்களுக்கு அமைச்சரின் அறிவிப்பு - நிதித் தேவைகளை பூர்த்தி செய்ய புதிய முறை  இந்த வருடத்தின் முதல் காலாண்டில் இந்நாட்டு நுண்நிதித்துறை ஒழுங்குபடுத்தப்படும் என பதில் நிதியமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த அவர், நுண்கடன் துறையில் அதிகளவு பயன்பெறுவது பெண்களே என தெரிவித்தார்.சிறு மற்றும் நடுத்தர வர்த்தகர்களின் நிதித் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் உத்தரவாத முறையொன்று எதிர்வரும் காலங்களில் அறிமுகப்படுத்தப்படும் எனவும் பதில் நிதியமைச்சர் ஷெஹான் சேமசிங்க மேலும் குறிப்பிடுகின்றார்.இதேவேளை, தேசிய சேமிப்பு வங்கிக்கு சொந்தமான பங்குகளை கொள்வனவு செய்வதற்கு மாத்திரமே ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்தின் மறுசீரமைப்புக்காக 1.3 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.குறித்த நிதி ஒதுக்கீடு தொடர்பில் பல்வேறு தரப்பினரும் தவறான தகவல்களை பரப்பி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement