• Apr 02 2025

நாடளாவிய ரீதியில் சுகாதார சேவைகள் முடங்கும் அபாயம்..! தொழிற்சங்கங்களின் அதிரடி தீர்மானம்

Chithra / Jan 21st 2024, 8:53 am
image

 

 பெப்ரவரி முதல் நாடளாவிய ரீதியில் தொடர்ச்சியான பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவதற்கு சுகாதார தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது.

மருத்துவர்களுக்கு அரசாங்கத்தால் வழங்க தீர்மானித்துள்ள 35,000 ரூபாய் போக்குவரத்து கொடுப்பனவை தங்களுக்கும் வழங்க வேண்டும் என கோரி, அவர்கள் இந்த பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்கவுள்ளனர்.

சுகாதார சேவையில் உள்ள 72 தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் பங்குபற்றிய விசேட கூட்டத்தில் இது ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டதாக சுகாதார தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் ரவி குமுதேஷ் தெரிவித்தார்.

இதன்படி, சுகாதார அமைச்சு மற்றும் நிதி அமைச்சுக்கு எதிர்ப்புத் தெரிவித்து நாடளாவிய ரீதியில் பொது வைத்தியசாலைகளில் தொடர்ச்சியான பணிப்புறக்கணிப்பை நடத்துவதற்கு சுகாதார தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.


நாடளாவிய ரீதியில் சுகாதார சேவைகள் முடங்கும் அபாயம். தொழிற்சங்கங்களின் அதிரடி தீர்மானம்   பெப்ரவரி முதல் நாடளாவிய ரீதியில் தொடர்ச்சியான பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவதற்கு சுகாதார தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது.மருத்துவர்களுக்கு அரசாங்கத்தால் வழங்க தீர்மானித்துள்ள 35,000 ரூபாய் போக்குவரத்து கொடுப்பனவை தங்களுக்கும் வழங்க வேண்டும் என கோரி, அவர்கள் இந்த பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்கவுள்ளனர்.சுகாதார சேவையில் உள்ள 72 தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் பங்குபற்றிய விசேட கூட்டத்தில் இது ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டதாக சுகாதார தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் ரவி குமுதேஷ் தெரிவித்தார்.இதன்படி, சுகாதார அமைச்சு மற்றும் நிதி அமைச்சுக்கு எதிர்ப்புத் தெரிவித்து நாடளாவிய ரீதியில் பொது வைத்தியசாலைகளில் தொடர்ச்சியான பணிப்புறக்கணிப்பை நடத்துவதற்கு சுகாதார தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement