• May 19 2024

தமிழரசுக் கட்சியின் தலைவர் தெரிவு இன்று - மத்திய குழு கூட்டம் ரத்து..!

Chithra / Jan 21st 2024, 8:41 am
image

Advertisement


இலங்கை தமிழரசுக் கட்சியின் வாக்கெடுப்பை நடத்துவதற்கு முன்னதாக கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தினை நேற்று   (21) கூட்டுவதற்கு தற்போதைய தலைவர் மாவை சேனாதிராஜா அறிவித்திருந்தபோதும் பதில் பொதுச்செயலாளருக்கு ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக அக்கூட்டம் இரத்துச் செய்யப்பட்டது.

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் புதிய தலைவரை தெரிவு செய்வதற்கான இரகசிய வாக்கெடுப்பு திருகோணமலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை(21) இடம்பெறவுள்ளது.

திருகோணமலை நகர மண்டபத்தில் தேர்தல் காலை 10 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

பதில் பொதுச்செயலாளர் வைத்தியர்.ப.சத்தியலிங்கத்தின் தலைமையில் நடைபெறும் இந்த வாக்கெடுப்பில் அவருக்கு உதவியாளர்களாக வடக்கு, கிழக்கு மாகணங்களின் எட்டு மாவட்டங்களைச் சேர்ந்த எட்டு பேர் செயற்படவுள்ளனர்.

இதன்படி, இலங்கை தமிழரசு கட்சியின் பொது சபை உறுப்பினர்கள் 330 பேருக்கு மேற்பட்டவர்கள் இன்று வாக்களிக்கவுள்ளனர்.

இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் பதவிக்காக நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், சிவஞானம் ஸ்ரீதரன் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சீனிதம்பி யோகேஸ்வரன் மூவர் தேர்தலில் போட்டியிட பிரேரிக்கப்பட்டாலும் இருவரிடமே போட்டி நிலவும் என தெரிவிக்கப்படுகிறது.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தனது வாக்கை சிறீதரனுக்கே அளிக்கபோவதாக அறிவித்திருந்தார்.

இந்நிலையில் தேர்தல் சுமூகமாக நடைபெற்றால் இன்று மாலை புதிய தலைவர் யார் என்பது தெரியவரும்.

இரகசிய வாக்கெடுப்பின் முடிகளுக்கமைய தெரிவாகும் புதிய தலைவர் எதிர்வரும் 28ஆம் திகதி இடம்பெறும் கட்சியின் தேசிய மாநாட்டின்போது உத்தியோகபூர்வமாக தமது கடமைகளை பொறுப்பேற்பார்.

தமிழரசுக் கட்சியின் தலைவர் தெரிவு இன்று - மத்திய குழு கூட்டம் ரத்து. இலங்கை தமிழரசுக் கட்சியின் வாக்கெடுப்பை நடத்துவதற்கு முன்னதாக கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தினை நேற்று   (21) கூட்டுவதற்கு தற்போதைய தலைவர் மாவை சேனாதிராஜா அறிவித்திருந்தபோதும் பதில் பொதுச்செயலாளருக்கு ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக அக்கூட்டம் இரத்துச் செய்யப்பட்டது.இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் புதிய தலைவரை தெரிவு செய்வதற்கான இரகசிய வாக்கெடுப்பு திருகோணமலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை(21) இடம்பெறவுள்ளது.திருகோணமலை நகர மண்டபத்தில் தேர்தல் காலை 10 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.பதில் பொதுச்செயலாளர் வைத்தியர்.ப.சத்தியலிங்கத்தின் தலைமையில் நடைபெறும் இந்த வாக்கெடுப்பில் அவருக்கு உதவியாளர்களாக வடக்கு, கிழக்கு மாகணங்களின் எட்டு மாவட்டங்களைச் சேர்ந்த எட்டு பேர் செயற்படவுள்ளனர்.இதன்படி, இலங்கை தமிழரசு கட்சியின் பொது சபை உறுப்பினர்கள் 330 பேருக்கு மேற்பட்டவர்கள் இன்று வாக்களிக்கவுள்ளனர்.இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் பதவிக்காக நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், சிவஞானம் ஸ்ரீதரன் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சீனிதம்பி யோகேஸ்வரன் மூவர் தேர்தலில் போட்டியிட பிரேரிக்கப்பட்டாலும் இருவரிடமே போட்டி நிலவும் என தெரிவிக்கப்படுகிறது.முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தனது வாக்கை சிறீதரனுக்கே அளிக்கபோவதாக அறிவித்திருந்தார்.இந்நிலையில் தேர்தல் சுமூகமாக நடைபெற்றால் இன்று மாலை புதிய தலைவர் யார் என்பது தெரியவரும்.இரகசிய வாக்கெடுப்பின் முடிகளுக்கமைய தெரிவாகும் புதிய தலைவர் எதிர்வரும் 28ஆம் திகதி இடம்பெறும் கட்சியின் தேசிய மாநாட்டின்போது உத்தியோகபூர்வமாக தமது கடமைகளை பொறுப்பேற்பார்.

Advertisement

Advertisement

Advertisement