• Nov 22 2024

இலங்கையில் பாடசாலை கல்வியிலிருந்து இடைவிலகும் பல மாணவர்கள்..! ஆசிரியர் சங்கம் அதிர்ச்சித் தகவல்

Chithra / Jan 21st 2024, 8:24 am
image

 

தற்போது அதிகரித்துள்ள வாழ்க்கைச்செலவு காரணமாக பெருந்தோட்டப்பகுதிகளில் உள்ள பல மாணவர்கள் பாடசாலை கல்வியிலிருந்து இடைவிலகியுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், மத்திய மாகாணத்தில் மாத்திரம் கடந்த வருடத்தில் 1,989 மாணவர்கள் பாடசாலைகளில் இருந்து இடைவிலகியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

நுவரெலியா மாவட்டத்தில் 570 மாணவர்களும், 

ஹட்டனில் 541 மாணவர்களும், கொத்மலையில் 319 மாணவர்களும், 

கம்பளையில் 250 மாணவர்களும் பாடசாலைகளில் இருந்து இடைவிலகியுள்ளனர்.

தற்போதைய பொருளாதார நிலையினால் மாணவர்களின் இடைவிலகல் அதிகரிப்படுமே தவிர குறைவடையாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையில் பாடசாலை கல்வியிலிருந்து இடைவிலகும் பல மாணவர்கள். ஆசிரியர் சங்கம் அதிர்ச்சித் தகவல்  தற்போது அதிகரித்துள்ள வாழ்க்கைச்செலவு காரணமாக பெருந்தோட்டப்பகுதிகளில் உள்ள பல மாணவர்கள் பாடசாலை கல்வியிலிருந்து இடைவிலகியுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.அத்துடன், மத்திய மாகாணத்தில் மாத்திரம் கடந்த வருடத்தில் 1,989 மாணவர்கள் பாடசாலைகளில் இருந்து இடைவிலகியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.நுவரெலியா மாவட்டத்தில் 570 மாணவர்களும், ஹட்டனில் 541 மாணவர்களும், கொத்மலையில் 319 மாணவர்களும், கம்பளையில் 250 மாணவர்களும் பாடசாலைகளில் இருந்து இடைவிலகியுள்ளனர்.தற்போதைய பொருளாதார நிலையினால் மாணவர்களின் இடைவிலகல் அதிகரிப்படுமே தவிர குறைவடையாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement