• Nov 25 2024

வற் வரிக்காக பதிவு செய்ய வேண்டிய நிறுவனங்கள் தொடர்பில் அமைச்சரின் முக்கிய அறிவித்தல்..!

Chithra / Jan 19th 2024, 10:17 am
image

 

வருடாந்தம் 80 மில்லியன் ரூபா இலாபமீட்டும் ஒவ்வொரு வியாபாரமும் அல்லது தொழிற்துறையும் பெறுமதி சேர் வரியில் (VAT) பதிவு செய்யப்பட வேண்டும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய அறிவித்துள்ளார்.

அத்துடன் அனைவரும் பார்க்கும் வகையில் வற் பதிவு சான்றிதழ் காட்சிப்படுத்தப்பட வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

யட்டியந்தோட்டையில் நேற்று இடம்பெற்ற கூட்டமொன்றின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

 தற்போது வற் வரி செலுத்துவதற்கான வரம்பு ஆண்டுக்கு 80 மில்லியன் ரூபா.

விரைவில் ஆண்டு வருவாயை 60 மில்லியன் ரூபாவாக குறைக்க தேவையான சட்ட ஏற்பாடுகள் செய்யப்படும்.

வற் பதிவு இலக்கம் காட்சிப்படுத்தப்படாவிட்டால், அவ்வாறானவர்களுக்கு எதிராக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு எவ்வித தடையும் இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

வற் வரிக்காக பதிவு செய்ய வேண்டிய நிறுவனங்கள் தொடர்பில் அமைச்சரின் முக்கிய அறிவித்தல்.  வருடாந்தம் 80 மில்லியன் ரூபா இலாபமீட்டும் ஒவ்வொரு வியாபாரமும் அல்லது தொழிற்துறையும் பெறுமதி சேர் வரியில் (VAT) பதிவு செய்யப்பட வேண்டும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய அறிவித்துள்ளார்.அத்துடன் அனைவரும் பார்க்கும் வகையில் வற் பதிவு சான்றிதழ் காட்சிப்படுத்தப்பட வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.யட்டியந்தோட்டையில் நேற்று இடம்பெற்ற கூட்டமொன்றின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார். தற்போது வற் வரி செலுத்துவதற்கான வரம்பு ஆண்டுக்கு 80 மில்லியன் ரூபா.விரைவில் ஆண்டு வருவாயை 60 மில்லியன் ரூபாவாக குறைக்க தேவையான சட்ட ஏற்பாடுகள் செய்யப்படும்.வற் பதிவு இலக்கம் காட்சிப்படுத்தப்படாவிட்டால், அவ்வாறானவர்களுக்கு எதிராக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு எவ்வித தடையும் இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement