• Nov 26 2024

1,250 பாடசாலைகள் தொடர்பில் கல்வி அமைச்சு எடுத்த திட்டம் - விரைவில் ஏற்படவுள்ள மாற்றம்

Chithra / Jul 29th 2024, 2:10 pm
image


சீன அரசாங்கத்திடமிருந்து 20 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நிதியுதவின் கீழ் 1,250 முன்னணிப் பாடசாலைகள் வெகு விரைவில் நட்புப் பாடசாலைகளாக அபிவிருத்தி செய்யப்பட்டு கல்வி அமைச்சால் நேரடியாக நிர்வகிக்கப்படுமென, கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

கொழும்பு சிறிமாவோ பண்டாரநாயக்க மகளிர் உயர்தரப் பாடசாலையில் தரம் ஒன்று தொடக்கம் தரம் 5 வரையிலான அனைத்து வகுப்பறைகளையும் சிநேகபூர்வ வகுப்பறைகளாக மாற்றும் வைபவத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அமைச்சர் இவ்விடயங்களை தெரிவித்தார்.

புதிய கல்வி முறை தொடர்பான முன்னோடித் திட்டம் அடுத்த வருடம் அமுல்படுத் தப்படும். இதற்கான ஏற்பாடுகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. 

இப்புதிய திட்டம் தரம் 01, தரம் 06 மற்றும் 10 வகுப்புகளுக்கு அமுல்படுத்தப்படும். இதற்கு தேவையான கற்றல் தொகுதிகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. 

தேவையான புத்தகங்கள் தயாரிக்கப்பட்டு அச்சுபதிவுக்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றார்.

1,250 பாடசாலைகள் தொடர்பில் கல்வி அமைச்சு எடுத்த திட்டம் - விரைவில் ஏற்படவுள்ள மாற்றம் சீன அரசாங்கத்திடமிருந்து 20 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நிதியுதவின் கீழ் 1,250 முன்னணிப் பாடசாலைகள் வெகு விரைவில் நட்புப் பாடசாலைகளாக அபிவிருத்தி செய்யப்பட்டு கல்வி அமைச்சால் நேரடியாக நிர்வகிக்கப்படுமென, கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.கொழும்பு சிறிமாவோ பண்டாரநாயக்க மகளிர் உயர்தரப் பாடசாலையில் தரம் ஒன்று தொடக்கம் தரம் 5 வரையிலான அனைத்து வகுப்பறைகளையும் சிநேகபூர்வ வகுப்பறைகளாக மாற்றும் வைபவத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அமைச்சர் இவ்விடயங்களை தெரிவித்தார்.புதிய கல்வி முறை தொடர்பான முன்னோடித் திட்டம் அடுத்த வருடம் அமுல்படுத் தப்படும். இதற்கான ஏற்பாடுகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. இப்புதிய திட்டம் தரம் 01, தரம் 06 மற்றும் 10 வகுப்புகளுக்கு அமுல்படுத்தப்படும். இதற்கு தேவையான கற்றல் தொகுதிகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. தேவையான புத்தகங்கள் தயாரிக்கப்பட்டு அச்சுபதிவுக்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றார்.

Advertisement

Advertisement

Advertisement