• Nov 28 2024

சட்டவிரோதமான முறையில் நாட்டுக்கு கொண்டுவரப்படும் அலைபேசிகள்: அரசுக்கு ஏற்பட்டுள்ள நட்டம்

Chithra / Dec 12th 2023, 12:49 pm
image

சட்டவிரோதமான முறையில் பெரும் எண்ணிக்கையிலான அலைபேசிகள் நாட்டுக்குள் கொண்டு வரப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனால் சட்ட ரீதியாக நாட்டுக்கு இறக்குமதி செய்யப்படும் அலைபேசி நிறுவனங்கள் பாதிப்புக்களை எதிர்நோக்குவதாக கூறப்படுகின்றது.

மேலும் சட்டவிரோதமான வழிகளில் அலைபேசிகள் கொண்டு வரப்படுவதனால் நாட்டுக்கு பாரியளவில் வரி வருமான இழப்பு ஏற்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு  நாட்டுக்குள் கொண்டு வரப்படும் அலைபேசிகள் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்பட்ட போதிலும் இதுவரையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெறுமதிசேர் வரி 18 வீதமாக உயர்த்தப்பட்டுள்ள நிலையில் சட்டரீதியாக அலைபேசி இறக்குமதி செய்யும் நிறுவனங்கள் மேலும் பாதிப்புக்களை எதிர்நோக்க நேரிடும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சட்ட ரீதியாக நாட்டுக்குள் கொண்டு வரப்படும் அலைபேசிகள் மூலம் வருடாந்தம் 52 மில்லியன் டொலர் வரி வருமானம் கிடைக்கப்பெறுவதாகவும், சட்டத்திற்கு புறம்பாக கொண்டு வரப்படும் அலைபேசிகளினால் நாட்டுக்கு 96 மில்லியன் டொலர் நட்டம் ஏற்படுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.


சட்டவிரோதமான முறையில் நாட்டுக்கு கொண்டுவரப்படும் அலைபேசிகள்: அரசுக்கு ஏற்பட்டுள்ள நட்டம் சட்டவிரோதமான முறையில் பெரும் எண்ணிக்கையிலான அலைபேசிகள் நாட்டுக்குள் கொண்டு வரப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.இதனால் சட்ட ரீதியாக நாட்டுக்கு இறக்குமதி செய்யப்படும் அலைபேசி நிறுவனங்கள் பாதிப்புக்களை எதிர்நோக்குவதாக கூறப்படுகின்றது.மேலும் சட்டவிரோதமான வழிகளில் அலைபேசிகள் கொண்டு வரப்படுவதனால் நாட்டுக்கு பாரியளவில் வரி வருமான இழப்பு ஏற்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.இவ்வாறு  நாட்டுக்குள் கொண்டு வரப்படும் அலைபேசிகள் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்பட்ட போதிலும் இதுவரையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.பெறுமதிசேர் வரி 18 வீதமாக உயர்த்தப்பட்டுள்ள நிலையில் சட்டரீதியாக அலைபேசி இறக்குமதி செய்யும் நிறுவனங்கள் மேலும் பாதிப்புக்களை எதிர்நோக்க நேரிடும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.சட்ட ரீதியாக நாட்டுக்குள் கொண்டு வரப்படும் அலைபேசிகள் மூலம் வருடாந்தம் 52 மில்லியன் டொலர் வரி வருமானம் கிடைக்கப்பெறுவதாகவும், சட்டத்திற்கு புறம்பாக கொண்டு வரப்படும் அலைபேசிகளினால் நாட்டுக்கு 96 மில்லியன் டொலர் நட்டம் ஏற்படுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement