ஜனாதிபதி செயலகத்தின் ஒருங்கிணைப்பின் கீழ் காணிப்பிரச்சினைகள் தொடர்பிலான திணைக்களங்களுக்கான நடமாடும் சேவை இன்றையதினம்(27) கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் முன்னெடுக்கப்பட்டது.
குறித்த நடமாடும் சேவையில், பொதுநிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு, பாதுகாப்பு அமைச்சு, நகர அபிவிருத்தி, காணி ஆணையாளர், நீர்ப்பாசனம், வனஜீவராசிகள் திணைக்களம்,பொலிஸ் திணைக்களம் உள்ளிட்ட இருபதிற்கும் மேற்பட்ட திணைக்களங்களின் பங்குபற்றலுடன் குறித்த நடமாடும் சேவை முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிகழ்வில், காணி மற்றும் சுற்றுலா அமைச்சின் செயலாளர், HMBP ஹேரத், வடமாகாண பிரதம செயலாளர் சமன் பந்துலசேன, ஜனாதிபதியின் வடமாகாணத்திற்கான இணைப்பாளர் இ.இளங்கோவன் அமைச்சுக்களின் மேலதிக செயலாளர்கள், திணைக்களங்களின் பணிப்பாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ஜனாதிபதி செயலகத்தின் ஒருங்கிணைப்பின் கீழ் கிளிநொச்சியில் நடமாடும் சேவை. ஜனாதிபதி செயலகத்தின் ஒருங்கிணைப்பின் கீழ் காணிப்பிரச்சினைகள் தொடர்பிலான திணைக்களங்களுக்கான நடமாடும் சேவை இன்றையதினம்(27) கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் முன்னெடுக்கப்பட்டது. குறித்த நடமாடும் சேவையில், பொதுநிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு, பாதுகாப்பு அமைச்சு, நகர அபிவிருத்தி, காணி ஆணையாளர், நீர்ப்பாசனம், வனஜீவராசிகள் திணைக்களம்,பொலிஸ் திணைக்களம் உள்ளிட்ட இருபதிற்கும் மேற்பட்ட திணைக்களங்களின் பங்குபற்றலுடன் குறித்த நடமாடும் சேவை முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இந்நிகழ்வில், காணி மற்றும் சுற்றுலா அமைச்சின் செயலாளர், HMBP ஹேரத், வடமாகாண பிரதம செயலாளர் சமன் பந்துலசேன, ஜனாதிபதியின் வடமாகாணத்திற்கான இணைப்பாளர் இ.இளங்கோவன் அமைச்சுக்களின் மேலதிக செயலாளர்கள், திணைக்களங்களின் பணிப்பாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.