அமெரிக்க அதிபர் ஜோ பைடன் குடும்பத்துக்கு 2023 ஆம் ஆண்டில், வெளிநாட்டுத் தலைவர்கள் அளித்த பரிசுகளில் விலை உயர்ந்தது, இந்தியப் பிரதமர் மோடி அளித்த பரிசு என்று தெரிய வந்துள்ளது.
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் அவரது மனைவி ஜில் பைடன் பெற்ற பரிசுப் பொருள்களின் விவரங்களை அந்நாட்டின் வெளியுறவுத் துறை தற்போது வெளியிட்டுள்ளது.
அதன்படி, ஜோ பைடனின் மனைவிக்கு பிரதமர் நரேந்திர மோடி அளித்த ரூ. 17 லட்சம் (20 ஆயிரம் டாலர்) மதிப்புள்ள 7.5 காரட் வைரம்தான், ஜில் பைடன் பெற்ற பரிசுகளிலேயே விலை உயர்ந்தது என்பது தெரிய வந்துள்ளது.
உக்ரைன் தூதர் அளித்த ப்ரூச் எனப்படும் எந்த உடையிலும் அணிந்துகொள்ளும் 14,063 டாலர் மதிப்புள்ள நகை இரண்டாம் இடத்தில் உள்ளது.
கடந்த 2023 ஆம் ஆண்டு தொடக்கத்தில் தனது அமெரிக்க பயணத்தின்போது பிரதமர் மோடி இந்த வைரைத்தை ஜில் பைடனுக்கு பரிசளித்தார். மேலும் அதிபர் ஜோ பைடனுக்கு செதுக்கப்பட்ட சந்தனப் பெட்டி, சிலை, எண்ணெய் விளக்கு மற்றும் 6,232 டாலர் மதிப்புள்ள 'தி டென் பிரின்சிபல் உபநிடதங்கள்' என்ற புத்தகத்தையும் மோடி பரிசாக அளித்தார்.
மொத்தத்தில், அமெரிக்க அதிகாரிகளுக்கு இந்தியா சார்பில் அந்த பயணத்தின்போது சுமார் $35,000 [சுமார் 32 லட்சம்] மதிப்பிலான பரிசுகள் வழங்கப்பட்டுள்ளது.
அமெரிக்க அதிபரின் மனைவிக்கு மோடி கொடுத்த பரிசு : ரூ.58 லட்சம் மதிப்பு வைரம் - நெகிழ்ச்சியில் ஜோ பைடன் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் குடும்பத்துக்கு 2023 ஆம் ஆண்டில், வெளிநாட்டுத் தலைவர்கள் அளித்த பரிசுகளில் விலை உயர்ந்தது, இந்தியப் பிரதமர் மோடி அளித்த பரிசு என்று தெரிய வந்துள்ளது.அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் அவரது மனைவி ஜில் பைடன் பெற்ற பரிசுப் பொருள்களின் விவரங்களை அந்நாட்டின் வெளியுறவுத் துறை தற்போது வெளியிட்டுள்ளது.அதன்படி, ஜோ பைடனின் மனைவிக்கு பிரதமர் நரேந்திர மோடி அளித்த ரூ. 17 லட்சம் (20 ஆயிரம் டாலர்) மதிப்புள்ள 7.5 காரட் வைரம்தான், ஜில் பைடன் பெற்ற பரிசுகளிலேயே விலை உயர்ந்தது என்பது தெரிய வந்துள்ளது.உக்ரைன் தூதர் அளித்த ப்ரூச் எனப்படும் எந்த உடையிலும் அணிந்துகொள்ளும் 14,063 டாலர் மதிப்புள்ள நகை இரண்டாம் இடத்தில் உள்ளது.கடந்த 2023 ஆம் ஆண்டு தொடக்கத்தில் தனது அமெரிக்க பயணத்தின்போது பிரதமர் மோடி இந்த வைரைத்தை ஜில் பைடனுக்கு பரிசளித்தார். மேலும் அதிபர் ஜோ பைடனுக்கு செதுக்கப்பட்ட சந்தனப் பெட்டி, சிலை, எண்ணெய் விளக்கு மற்றும் 6,232 டாலர் மதிப்புள்ள 'தி டென் பிரின்சிபல் உபநிடதங்கள்' என்ற புத்தகத்தையும் மோடி பரிசாக அளித்தார்.மொத்தத்தில், அமெரிக்க அதிகாரிகளுக்கு இந்தியா சார்பில் அந்த பயணத்தின்போது சுமார் $35,000 [சுமார் 32 லட்சம்] மதிப்பிலான பரிசுகள் வழங்கப்பட்டுள்ளது.