• Jan 06 2025

போரதீவுப்பற்றில் நீர்நிலைக்குள் வீழ்ந்த : ஒன்றரை வயது குழந்தை உயிரிழப்பு !

Tharmini / Jan 4th 2025, 4:34 pm
image

பெற்றோரின் கவனயீனம் காரணமாக நீர்நிலைக்குள் வீழ்ந்து ஒன்றரை வயது குழந்தையொன்று உயிரிழந்த சம்பவம் இன்று (04) பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்பற்று இளைஞர் விவசாயத்திட்டத்தில் இன்று (04) காலை நீரோடையில் விழுந்து ஒன்றரை வயதுடைய ஆண் குழந்தையான முருகேசு விகான் என்னும் குழந்தையே உயிரிழந்துள்ளது.

குறித்த நீர்நிலைக்கு அருகில் உள்ள வீட்டிலிருந்து குழந்தை தத்திநடந்துவந்து நீரோடைக்குள் விளையாடிக்கொண்டிருந்தபோது நீருக்குள் வீழ்ந்துள்ளது.

வாய்க்கால் நிரோடையில் விழுந்த குழந்தையினை பழுகாமம் பிரதேசவைத்திய சாலைக்கு கொன்று சென்ற போதும் குழந்தை வைத்திய சாலைக்கு வருமுன்  உயிரிழந்துள்ளதாக வைத்தியர்களினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரேத பரிசோதனைக்காக குழந்தை களுவாஞ்சிகுடி ஆதாரவைத்தியசாலைக்கு கொன்டுசெல்லப்பட்டுள்ளது.

இது தொடர்பான விசாரணைகளை வெல்லாவெளி பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

பெற்றோரின் கவனயீனம் பிள்ளைகள் மீதான அக்கரையற்ற செயற்பாடுகளே இவ்வாறான சம்பவம் ஏற்படுவதற்கான காரணம் என சமூக செயற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.




போரதீவுப்பற்றில் நீர்நிலைக்குள் வீழ்ந்த : ஒன்றரை வயது குழந்தை உயிரிழப்பு பெற்றோரின் கவனயீனம் காரணமாக நீர்நிலைக்குள் வீழ்ந்து ஒன்றரை வயது குழந்தையொன்று உயிரிழந்த சம்பவம் இன்று (04) பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்பற்று இளைஞர் விவசாயத்திட்டத்தில் இன்று (04) காலை நீரோடையில் விழுந்து ஒன்றரை வயதுடைய ஆண் குழந்தையான முருகேசு விகான் என்னும் குழந்தையே உயிரிழந்துள்ளது.குறித்த நீர்நிலைக்கு அருகில் உள்ள வீட்டிலிருந்து குழந்தை தத்திநடந்துவந்து நீரோடைக்குள் விளையாடிக்கொண்டிருந்தபோது நீருக்குள் வீழ்ந்துள்ளது.வாய்க்கால் நிரோடையில் விழுந்த குழந்தையினை பழுகாமம் பிரதேசவைத்திய சாலைக்கு கொன்று சென்ற போதும் குழந்தை வைத்திய சாலைக்கு வருமுன்  உயிரிழந்துள்ளதாக வைத்தியர்களினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.பிரேத பரிசோதனைக்காக குழந்தை களுவாஞ்சிகுடி ஆதாரவைத்தியசாலைக்கு கொன்டுசெல்லப்பட்டுள்ளது.இது தொடர்பான விசாரணைகளை வெல்லாவெளி பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.பெற்றோரின் கவனயீனம் பிள்ளைகள் மீதான அக்கரையற்ற செயற்பாடுகளே இவ்வாறான சம்பவம் ஏற்படுவதற்கான காரணம் என சமூக செயற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement