தோட்டத் தொழிலாளர்களுக்கு 200 ரூபாவால் சம்பளம் அதிகரித்தமைக்கு ஜனாதிபதிக்கு வாழ்த்து தெரிவித்தும் அதை எதிர்க்கும் எதிர்கட்சிக்கு கண்டனம் தெரிவித்தும் புஸ்ஸல்லாவையில் போராட்டம் நடைபெற்றது.
புஸ்ஸல்லாவை மெல்போட் பாலத்தில் இருந்து பேரணியாக வந்த மக்கள், புஸ்ஸல்லாவை பொது பஸ் தரிப்பிடத்தில் இருந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தேயிலையில் தான் தேசம் வாழுது சம்பளத்தை கேட்டால் ஏன் வேகுது?, சம்பளத்தை உயர்த்தியது எதிர்க்கட்சியினருக்கு வருத்தமா?, அநுர எங்கள் மூச்சு சபை ஏறாதுடா உங்கள் பேச்சு போன்ற வாசகங்கள் எழுதிய பதாதைகள் ஏந்தியும் கோஷங்கள் எழுப்பியும் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
போராட்டத்தில் சுமார் நூற்றுக்கு மேற்பட்ட புசல்லாவை பிரதேச தோட்ட மக்கள் கலந்து கொண்டிருந்தனர்
சம்பளத்தை உயர்த்தியது எதிர்க்கட்சியினருக்கு வருத்தமா அநுர எங்கள் மூச்சு புஸ்ஸல்லாவை மக்கள் போராட்டம் தோட்டத் தொழிலாளர்களுக்கு 200 ரூபாவால் சம்பளம் அதிகரித்தமைக்கு ஜனாதிபதிக்கு வாழ்த்து தெரிவித்தும் அதை எதிர்க்கும் எதிர்கட்சிக்கு கண்டனம் தெரிவித்தும் புஸ்ஸல்லாவையில் போராட்டம் நடைபெற்றது. புஸ்ஸல்லாவை மெல்போட் பாலத்தில் இருந்து பேரணியாக வந்த மக்கள், புஸ்ஸல்லாவை பொது பஸ் தரிப்பிடத்தில் இருந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.தேயிலையில் தான் தேசம் வாழுது சம்பளத்தை கேட்டால் ஏன் வேகுது, சம்பளத்தை உயர்த்தியது எதிர்க்கட்சியினருக்கு வருத்தமா, அநுர எங்கள் மூச்சு சபை ஏறாதுடா உங்கள் பேச்சு போன்ற வாசகங்கள் எழுதிய பதாதைகள் ஏந்தியும் கோஷங்கள் எழுப்பியும் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.போராட்டத்தில் சுமார் நூற்றுக்கு மேற்பட்ட புசல்லாவை பிரதேச தோட்ட மக்கள் கலந்து கொண்டிருந்தனர்