நிந்தவூர் பிரதேசத்தில் கோழி இறைச்சியின் விலையை நிர்ணயம் செய்வதற்கான கலந்துரையாடல் ஞாயிற்றுக்கிழமை இடம் பெற்றது.
நிந்தவூர் பிரதேச சபையின் பதில் தவிசாளர் சட்டத்தரணி எம். ஐ .இர்பான், நிந்தவூர் பிரதேச சபை மண்டபத்தில் நடைபெற்ற இந்த கலந்துரையாடலில் பிரதேச சபையின் உறுப்பினர்களான எம் .எல் .சம்சுன் அலி, ஏ. இப்திகார் அஹமட், எம். எம். அன்ஸார், எம். ஏ. எம். றசீன், பிரதேச சபையின் செயலாளர் எஸ். ஷிஹாப்தீன் உட்பட கோழி இறைச்சி கடை உரிமையாளர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
இதன் போது அட்டாளச்சேனை, கால்முனை, சாய்ந்தமருந்து போன்ற பிரதேசங்களில் கோழி இறைச்சி இன்று ஆயிரம் ரூபாவுக்கு விற்பனையாகின்ற போது நிவ்தவூரில் மாத்திரம் 1200 ரூபாவுக்கு விற்பனை செய்வது மனச்சாட்சிக்கு விரோதமானது என சுட்டிக்காட்டப்பட்டது.
இதன்போது கருத்து தெரிவித்த கோழி இறைச்சி கடை உரிமையாளர்கள் ஏனைய பிரதேசங்களில் கொழுப்பு மற்றும் தரம் குறைந்த கோழி இறைச்சியினை விலை குறைத்து விற்பனை செய்வதாக குறிப்பிட்டதுடன் தமக்கு அந்த விலை கட்டுப்பாடாகவில்லை எனவும் தெரிவித்தனர்.
இதனை அடுத்து குறைந்த பட்சம் ஏனைய பிரதேசங்களில் நாளாந்தம் விற்பனையாகின்ற விலைக்கு நிகராக நிந்தவூர் பிரதேசத்தில் கோழி இறைச்சியினை விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டனர்.
தவறும் பட்சத்தில் இறைச்சி கடைகளின் அனுமதி பத்திரங்களை இரத்து செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பதில் தவிசாளர் எம் ஐ இர்பான் இதன் போது தெரிவித்துள்ளார்.
கோழி இறைச்சி விலையை கட்டுப்படுத்த நடவடிக்கை நிந்தவூர் பிரதேசத்தில் கோழி இறைச்சியின் விலையை நிர்ணயம் செய்வதற்கான கலந்துரையாடல் ஞாயிற்றுக்கிழமை இடம் பெற்றது.நிந்தவூர் பிரதேச சபையின் பதில் தவிசாளர் சட்டத்தரணி எம். ஐ .இர்பான், நிந்தவூர் பிரதேச சபை மண்டபத்தில் நடைபெற்ற இந்த கலந்துரையாடலில் பிரதேச சபையின் உறுப்பினர்களான எம் .எல் .சம்சுன் அலி, ஏ. இப்திகார் அஹமட், எம். எம். அன்ஸார், எம். ஏ. எம். றசீன், பிரதேச சபையின் செயலாளர் எஸ். ஷிஹாப்தீன் உட்பட கோழி இறைச்சி கடை உரிமையாளர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.இதன் போது அட்டாளச்சேனை, கால்முனை, சாய்ந்தமருந்து போன்ற பிரதேசங்களில் கோழி இறைச்சி இன்று ஆயிரம் ரூபாவுக்கு விற்பனையாகின்ற போது நிவ்தவூரில் மாத்திரம் 1200 ரூபாவுக்கு விற்பனை செய்வது மனச்சாட்சிக்கு விரோதமானது என சுட்டிக்காட்டப்பட்டது.இதன்போது கருத்து தெரிவித்த கோழி இறைச்சி கடை உரிமையாளர்கள் ஏனைய பிரதேசங்களில் கொழுப்பு மற்றும் தரம் குறைந்த கோழி இறைச்சியினை விலை குறைத்து விற்பனை செய்வதாக குறிப்பிட்டதுடன் தமக்கு அந்த விலை கட்டுப்பாடாகவில்லை எனவும் தெரிவித்தனர்.இதனை அடுத்து குறைந்த பட்சம் ஏனைய பிரதேசங்களில் நாளாந்தம் விற்பனையாகின்ற விலைக்கு நிகராக நிந்தவூர் பிரதேசத்தில் கோழி இறைச்சியினை விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டனர்.தவறும் பட்சத்தில் இறைச்சி கடைகளின் அனுமதி பத்திரங்களை இரத்து செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பதில் தவிசாளர் எம் ஐ இர்பான் இதன் போது தெரிவித்துள்ளார்.