ஐரோப்பிய நாடுகளில் சமீப காலமாக விமான நிலையங்கள், ராணுவ தளங்கள் போன்ற முக்கிய பகுதிகளின் மேலாக அடையாளம் தெரியாத டிரோன்கள் பறந்து வருகின்றன
இதன் தொடர்ச்சியாக, நெதர்லாந்தின் இரு முக்கிய இடங்களிலும் டிரோன் அச்சுறுத்தல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நெதர்லாந்தின் Volkel Air Base மீது அடையாளம் தெரியாத டிரோன்கள் பறந்தது முதலில் கண்டுபிடிக்கப்பட்டது.
நிலமை சிக்கல் உருவாகக்கூடும் எனக் கருதிய வான் பாதுகாப்பு படையினர் அவற்றை சுட்டு வீழ்த்த முயன்றபோது டிரோன்கள் தப்பிச்சென்றன.
சம்பவத்துக்கு சில மணி நேரங்களிலேயே, அருகிலுள்ள Eindhoven Airport வான்வழியிலும் பல டிரோன்கள் பறப்பது உறுதி செய்யப்பட்டது.
பயணிகள் மற்றும் விமானங்களின் பாதுகாப்பை முன்னிட்டு,விமான சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டு, வான்பாதை கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டது. இதனால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது.
நெதர்லாந்து ராணுவ மந்திரி ரூபன் பிரெக்கல்மன்ஸ் கருத்து தெரிவிக்கையில்
இதுபோன்ற டிரோன் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள புதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் உருவாக்கப்பட்டு வருகின்றன.
எதிர்காலத்தில் இப்படியான பிரச்சனைகளை உடனடியாக தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
தொடர்ச்சியாக அதிகரித்து வரும் டிரோன் புகுதல்கள்,
ஐரோப்பிய நாடுகளில் விமான மற்றும் ராணுவ தளங்களின் பாதுகாப்பில் புதிய சவாலாக மாறி வருகிறது.
நெதர்லாந்தில் விமான நிலையம் அருகே டிரோன்கள் பறந்ததால் பரபரப்பு, விமான சேவை தற்காலிகமாக நிறுத்தம் ஐரோப்பிய நாடுகளில் சமீப காலமாக விமான நிலையங்கள், ராணுவ தளங்கள் போன்ற முக்கிய பகுதிகளின் மேலாக அடையாளம் தெரியாத டிரோன்கள் பறந்து வருகின்றனஇதன் தொடர்ச்சியாக, நெதர்லாந்தின் இரு முக்கிய இடங்களிலும் டிரோன் அச்சுறுத்தல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.நெதர்லாந்தின் Volkel Air Base மீது அடையாளம் தெரியாத டிரோன்கள் பறந்தது முதலில் கண்டுபிடிக்கப்பட்டது. நிலமை சிக்கல் உருவாகக்கூடும் எனக் கருதிய வான் பாதுகாப்பு படையினர் அவற்றை சுட்டு வீழ்த்த முயன்றபோது டிரோன்கள் தப்பிச்சென்றன.சம்பவத்துக்கு சில மணி நேரங்களிலேயே, அருகிலுள்ள Eindhoven Airport வான்வழியிலும் பல டிரோன்கள் பறப்பது உறுதி செய்யப்பட்டது. பயணிகள் மற்றும் விமானங்களின் பாதுகாப்பை முன்னிட்டு,விமான சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டு, வான்பாதை கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டது. இதனால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது.நெதர்லாந்து ராணுவ மந்திரி ரூபன் பிரெக்கல்மன்ஸ் கருத்து தெரிவிக்கையில் இதுபோன்ற டிரோன் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள புதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. எதிர்காலத்தில் இப்படியான பிரச்சனைகளை உடனடியாக தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.தொடர்ச்சியாக அதிகரித்து வரும் டிரோன் புகுதல்கள், ஐரோப்பிய நாடுகளில் விமான மற்றும் ராணுவ தளங்களின் பாதுகாப்பில் புதிய சவாலாக மாறி வருகிறது.