• Nov 25 2025

வன்முறையற்ற பால்நிலை சமத்துவத்தை உறுதிசெய்ய 16 நாள் செயற்றிட்டம் - சுகிர்தராஜ் தெரிவிப்பு

Chithra / Nov 24th 2025, 5:16 pm
image


இணைய வழி வன்முறையை இல்லாதொழித்து, வன்முறையற்ற பால்நிலை சமத்துவத்தை உறுதிசெய்யும் வகையில், 16 நாள் செயற்றிட்டம் ஒன்றை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளதாக சமூக செயற்பாடு மையம் - ஜெசாக் அமைப்பு  தெரிவித்துள்ளது.

குறித்த அமைப்பின் பிரதம நிறைவேற்று பணிப்பாளர் சுகிர்தராஜ் இன்று (24)  ஊடக சந்திப்பொன்றை முன்னெடுத்து இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில் -

பெண்கள், சிறுவர்களின் நலன்களை முன்னிறுத்தி பல்வேறு சேவைகளை முன்னெடுத்துவரும் ஓர் அமைப்பு என்ற ரீதியில் பெண்களின் நலன்கள் பிரச்சினைகளை பல்வேறு கோணங்களில் தீர்வுகளைக் காண விழிப்புணர்வுகளையும் செயலமர்வுகளையும் முன்னெடுத்து மக்களிடம் கொண்டுசென்றுள்ளோம்.

அதன் அடிப்படையில் இம்முறை, வன்முறை இல்லா சமூகம் ஒன்றை கட்டியெழுப்பும் நோக்குடன் திட்டங்களை முன்னெடுக்கவுள்ளோம்.

இதேநேரம் வருடா வருடம் கார்த்திகை 25 முதல் மார்கழி 15 வரை 16 நாள்கள் பிரசார விழிப்புணர்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

அதன் படி இம்முறை சமூகத்தில் பால்நிலைசார் வன்முறையை இல்லாதொழிக்கும் விடையத்தில் இருக்கும் சவால்களை மையப்படுத்தி செயற்றிட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

குறிப்பாக இணைய வழி வன்முறையை இல்லாதொழிக்கும் விழிப்புணர்வை முன்னெடுக்கவுள்ளோம்.

இதற்கு அனைத்து தரப்புக்களும் ஒன்றிணைவது அவசியம்.

இதற்கான செயற்றிட்டங்களை பிரதேச செயலக ரீதியில் முன்னெடுக்க ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. என தெரிவித்தார். 

வன்முறையற்ற பால்நிலை சமத்துவத்தை உறுதிசெய்ய 16 நாள் செயற்றிட்டம் - சுகிர்தராஜ் தெரிவிப்பு இணைய வழி வன்முறையை இல்லாதொழித்து, வன்முறையற்ற பால்நிலை சமத்துவத்தை உறுதிசெய்யும் வகையில், 16 நாள் செயற்றிட்டம் ஒன்றை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளதாக சமூக செயற்பாடு மையம் - ஜெசாக் அமைப்பு  தெரிவித்துள்ளது.குறித்த அமைப்பின் பிரதம நிறைவேற்று பணிப்பாளர் சுகிர்தராஜ் இன்று (24)  ஊடக சந்திப்பொன்றை முன்னெடுத்து இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில் -பெண்கள், சிறுவர்களின் நலன்களை முன்னிறுத்தி பல்வேறு சேவைகளை முன்னெடுத்துவரும் ஓர் அமைப்பு என்ற ரீதியில் பெண்களின் நலன்கள் பிரச்சினைகளை பல்வேறு கோணங்களில் தீர்வுகளைக் காண விழிப்புணர்வுகளையும் செயலமர்வுகளையும் முன்னெடுத்து மக்களிடம் கொண்டுசென்றுள்ளோம்.அதன் அடிப்படையில் இம்முறை, வன்முறை இல்லா சமூகம் ஒன்றை கட்டியெழுப்பும் நோக்குடன் திட்டங்களை முன்னெடுக்கவுள்ளோம்.இதேநேரம் வருடா வருடம் கார்த்திகை 25 முதல் மார்கழி 15 வரை 16 நாள்கள் பிரசார விழிப்புணர்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.அதன் படி இம்முறை சமூகத்தில் பால்நிலைசார் வன்முறையை இல்லாதொழிக்கும் விடையத்தில் இருக்கும் சவால்களை மையப்படுத்தி செயற்றிட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.குறிப்பாக இணைய வழி வன்முறையை இல்லாதொழிக்கும் விழிப்புணர்வை முன்னெடுக்கவுள்ளோம்.இதற்கு அனைத்து தரப்புக்களும் ஒன்றிணைவது அவசியம்.இதற்கான செயற்றிட்டங்களை பிரதேச செயலக ரீதியில் முன்னெடுக்க ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. என தெரிவித்தார். 

Advertisement

Advertisement

Advertisement