• Nov 25 2025

ஓய்வுபெற்ற இராணுவ வீரர்கள் பாராளுமன்ற சுற்றுவட்டத்தில் ஆர்ப்பாட்டம்

Chithra / Nov 24th 2025, 4:06 pm
image


ஓய்வுபெற்ற இராணுவ வீரர்கள் குழுவொன்று இன்று (24) பொல்துவ பாராளுமன்ற சுற்றுவட்டத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

இராணுவ வீரர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான தேசிய அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் முப்படை மற்றும் பொலிஸ் சேவையைச் சேர்ந்த ஓய்வுபெற்ற படைவீரர்கள் பலர் கலந்துகொண்டிருந்தனர். 

தாம் உயிரிழந்த பின்னர் தமது ஓய்வூதியத்தை எவ்வித குறைப்பும் இன்றி தமது தங்கியிருப்பாளர்களுக்கு வழங்குமாறு கோரியே அவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

ஆர்ப்பாட்டத்தின் பின்னர் அக்குழுவினர் பாராளுமன்றத்தை நோக்கிச் செல்ல முற்பட்ட வேளையில், பொலிஸார் அவர்களைத் தடுக்க முற்பட்டதால் அங்கு பதற்றமான நிலைமையும் ஏற்பட்டது.

ஓய்வுபெற்ற இராணுவ வீரர்கள் பாராளுமன்ற சுற்றுவட்டத்தில் ஆர்ப்பாட்டம் ஓய்வுபெற்ற இராணுவ வீரர்கள் குழுவொன்று இன்று (24) பொல்துவ பாராளுமன்ற சுற்றுவட்டத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இராணுவ வீரர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான தேசிய அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் முப்படை மற்றும் பொலிஸ் சேவையைச் சேர்ந்த ஓய்வுபெற்ற படைவீரர்கள் பலர் கலந்துகொண்டிருந்தனர். தாம் உயிரிழந்த பின்னர் தமது ஓய்வூதியத்தை எவ்வித குறைப்பும் இன்றி தமது தங்கியிருப்பாளர்களுக்கு வழங்குமாறு கோரியே அவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தின் பின்னர் அக்குழுவினர் பாராளுமன்றத்தை நோக்கிச் செல்ல முற்பட்ட வேளையில், பொலிஸார் அவர்களைத் தடுக்க முற்பட்டதால் அங்கு பதற்றமான நிலைமையும் ஏற்பட்டது.

Advertisement

Advertisement

Advertisement