• Nov 25 2025

அம்பிளாந்துறையில் மாவீரர்களின் பெற்றோர் கௌரவிப்பு நிகழ்வு

Chithra / Nov 24th 2025, 5:18 pm
image

மட்டக்களப்பு - அம்பிளாந்துறை கிராமத்தில் இன்றைய தினம் மாவீரர்களின் பெற்றோர்களை கௌரவிக்கும் நிகழ்வு இடம்பெற்றது.

முன்னாள் போராளி குகதாசன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் அம்பிளாந்துறை கிராமத்தைச் சேர்ந்த மாவீரர்களின் பெற்றோர்கள் இதன்போது கௌரவிக்கப்பட்டனர்.

மாவீரர்களின் பெற்றோர்கள் மலர் மாலை அணிவிக்கப்பட்டு வரவேற்கப்பட்டதைத் தொடர்ந்து பொதுச் சுடர் ஏற்றப்பட்டு, மங்கல விளக்கு ஏற்றப்பட்டதைத் தொடர்ந்து அங்கு வைக்கப்பட்டிருந்த மாவீரர்களாகிய தமது பிள்ளைகளின் புகைப்படத்திற்கு சுடரேற்றி மலர் அஞ்சலி செலுத்தி அகவணக்கம் செலுத்தினர்.

இதன் போது மாவீரர்களைப் பற்றிய கருத்துக்கள், பேச்சுக்கள், கவிதை பாடல்களும், இடம்பெற்றன.

பின்னர் மாவீரர்களின் பெற்றோருக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டு உலர் உணவுப் பொதிகளும் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்


அம்பிளாந்துறையில் மாவீரர்களின் பெற்றோர் கௌரவிப்பு நிகழ்வு மட்டக்களப்பு - அம்பிளாந்துறை கிராமத்தில் இன்றைய தினம் மாவீரர்களின் பெற்றோர்களை கௌரவிக்கும் நிகழ்வு இடம்பெற்றது.முன்னாள் போராளி குகதாசன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் அம்பிளாந்துறை கிராமத்தைச் சேர்ந்த மாவீரர்களின் பெற்றோர்கள் இதன்போது கௌரவிக்கப்பட்டனர்.மாவீரர்களின் பெற்றோர்கள் மலர் மாலை அணிவிக்கப்பட்டு வரவேற்கப்பட்டதைத் தொடர்ந்து பொதுச் சுடர் ஏற்றப்பட்டு, மங்கல விளக்கு ஏற்றப்பட்டதைத் தொடர்ந்து அங்கு வைக்கப்பட்டிருந்த மாவீரர்களாகிய தமது பிள்ளைகளின் புகைப்படத்திற்கு சுடரேற்றி மலர் அஞ்சலி செலுத்தி அகவணக்கம் செலுத்தினர்.இதன் போது மாவீரர்களைப் பற்றிய கருத்துக்கள், பேச்சுக்கள், கவிதை பாடல்களும், இடம்பெற்றன.பின்னர் மாவீரர்களின் பெற்றோருக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டு உலர் உணவுப் பொதிகளும் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்

Advertisement

Advertisement

Advertisement