• Nov 25 2025

இன்று முதல் பேருந்துகளில் வங்கி அட்டைகள் மூலம் பணம் செலுத்தும் முறை!

Bus
Chithra / Nov 24th 2025, 1:32 pm
image

பயணிகள் பேருந்துகளில் பயணிக்கும் போது பயணச்சீட்டுகளை கொள்வனவு செய்வதற்கு வங்கி அட்டைகள் மூலம் பணம் செலுத்தும் வசதி இன்று முதல் வழங்கப்படவுள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது. 

இதற்கமைய, இதன் ஆரம்ப நிகழ்வு இன்று காலை மாகும்புர பல்நோக்கு போக்குவரத்து மத்திய நிலையத்தில் இடம்பெறவுள்ளது.

பேருந்து கட்டணம் செலுத்திய பின்னர் மீதிப் பணத்தை திரும்பப் பெறாதது போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வாக, வங்கி அட்டைகள் ஊடாக கட்டணம் செலுத்தும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 

டிஜிட்டல் அமைச்சு மற்றும் போக்குவரத்து அமைச்சு இணைந்து இந்த புதிய முறையை நடைமுறைப்படுத்துகின்றன. 

முதற்கட்டமாக சுமார் 20 வழித்தடங்களில் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.


இன்று முதல் பேருந்துகளில் வங்கி அட்டைகள் மூலம் பணம் செலுத்தும் முறை பயணிகள் பேருந்துகளில் பயணிக்கும் போது பயணச்சீட்டுகளை கொள்வனவு செய்வதற்கு வங்கி அட்டைகள் மூலம் பணம் செலுத்தும் வசதி இன்று முதல் வழங்கப்படவுள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய, இதன் ஆரம்ப நிகழ்வு இன்று காலை மாகும்புர பல்நோக்கு போக்குவரத்து மத்திய நிலையத்தில் இடம்பெறவுள்ளது.பேருந்து கட்டணம் செலுத்திய பின்னர் மீதிப் பணத்தை திரும்பப் பெறாதது போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வாக, வங்கி அட்டைகள் ஊடாக கட்டணம் செலுத்தும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. டிஜிட்டல் அமைச்சு மற்றும் போக்குவரத்து அமைச்சு இணைந்து இந்த புதிய முறையை நடைமுறைப்படுத்துகின்றன. முதற்கட்டமாக சுமார் 20 வழித்தடங்களில் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement