• Apr 01 2025

மோடியின் இலங்கை வருகை; இந்தியாவுடன் பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட திட்டம்!

Chithra / Mar 29th 2025, 3:56 pm
image


இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயத்தின் போது பாதுகாப்பு ஒத்துழைப்புக்கான கட்டமைப்பு ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்படவுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இது 1987ஆம் ஆண்டு இந்திய அமைதி காக்கும் படையின் தலையீட்டுக்கு பின்னர் கைச்சாத்திடப்படும் முதலாவது பாதுகாப்பு தொடர்பான ஒப்பந்தமாகும் என இந்திய ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

அத்துடன் இலங்கையின் பொருளாதார மீட்சிக்கு ஆதரவளிக்கும் முயற்சிகள் தொடர்பான உடன்படிக்கையும் இந்திய பிரதமரின் இலங்கை விஜயத்தின் போது கைச்சாத்தாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவரது இலங்கை விஜயத்தின் போது பாதுகாப்பு, வலுசக்தி, உட்கட்டமைப்பு உள்ளிட்ட துறைகள் தொடர்பில் அவதானம் செலுத்தப்படும் என இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டதாக ஹிந்துஸ்தான் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

மோடியின் இலங்கை வருகை; இந்தியாவுடன் பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட திட்டம் இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயத்தின் போது பாதுகாப்பு ஒத்துழைப்புக்கான கட்டமைப்பு ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்படவுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.இது 1987ஆம் ஆண்டு இந்திய அமைதி காக்கும் படையின் தலையீட்டுக்கு பின்னர் கைச்சாத்திடப்படும் முதலாவது பாதுகாப்பு தொடர்பான ஒப்பந்தமாகும் என இந்திய ஊடகமொன்று தெரிவித்துள்ளது.அத்துடன் இலங்கையின் பொருளாதார மீட்சிக்கு ஆதரவளிக்கும் முயற்சிகள் தொடர்பான உடன்படிக்கையும் இந்திய பிரதமரின் இலங்கை விஜயத்தின் போது கைச்சாத்தாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.அவரது இலங்கை விஜயத்தின் போது பாதுகாப்பு, வலுசக்தி, உட்கட்டமைப்பு உள்ளிட்ட துறைகள் தொடர்பில் அவதானம் செலுத்தப்படும் என இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டதாக ஹிந்துஸ்தான் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement