• Nov 22 2024

முகமது ஷமிக்கு அர்ஜூனா விருது- சச்சின், கங்குலி வரிசையில் இணைகிறார்.!Samugam media

Tamil nila / Dec 20th 2023, 6:57 pm
image

இந்தியாவில் விளையாட்டு துறையில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கு வழங்கப்படும் இரண்டாவது உயரிய விருதாக அர்ஜூனா விருது கருதப்படுகிறது.

அண்மையில் இந்தியாவில் நடந்துமுடிந்த உலகக் கிண்ணத் தொடரில் 7 இன்னிங்சில் ஆடிய முகமது ஷமி 24 விக்கெட்டுகள் வீழ்த்தி பல போட்டிகளில் இந்திய அணியின் வெற்றிக்கு வழிசமைத்திருந்தார்.

சிறந்த பந்துவீச்சாக 57 ஓட்டங்களை கொடுத்து 7 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தார். இதன்மூலம் இந்த தொடரில் அதிக விக்கெட்டுகள் கைப்பற்றிய வீரர் என்ற விருதை சமி தட்டிச் சென்றார்.

இதற்கிடையே, விளையாட்டு அமைச்சிடம் பிசிசிஐ சிறப்பு கோரிக்கையை முன்வைத்து முகமது ஷமியின் பெயரை அர்ஜூனா விருதுக்கு பரிந்துரை செய்திருந்தது.

இந்நிலையில், இந்த ஆண்டுக்கான விளையாட்டு விருதுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது.

மேஜர் தயான்சந்த் கேல் ரத்னா விருது டேபிள் டென்னிஸ் வீரர்களான சிராக் சந்திரசேகர் ஷெட்டி, சாத்விக் ஜெயராஜ் ஜோடிக்கு அளிக்கப்படுகிறது.

இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமி, பிரக்ஞானந்தாவின் சகோதரி வைஷாலி உள்பட 26 பேர் அர்ஜூனா விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ஏற்கனவே கவுதம் கம்பீர், ஹர்பஜன் சிங், வீரேந்திர சேவாக், ராகுல் டிராவிட், சவுரவ் கங்குலி, ரவி சாஸ்திரி, சச்சின் டெண்டுல்கர், அனில் கும்ப்ளே உள்ளிட்ட கிரிக்கெட் வீரர்களுக்கு அர்ஜூனா விருது வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அதேபோன்று அர்ஜூனா விருதை பெறும் முதல் இஸ்லாமியராகவும் முகமது ஷமி பதிவாகியுள்ளார்.

இதற்கு முன்னர் இந்திய அணியில் இடம்பெற்றிருந்த இஸ்லாமிய வீரர்கள் எவரின் பெயரும் அர்ஜூனா விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டிருக்கவில்லை என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.

முகமது ஷமிக்கு அர்ஜூனா விருது- சச்சின், கங்குலி வரிசையில் இணைகிறார்.Samugam media இந்தியாவில் விளையாட்டு துறையில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கு வழங்கப்படும் இரண்டாவது உயரிய விருதாக அர்ஜூனா விருது கருதப்படுகிறது.அண்மையில் இந்தியாவில் நடந்துமுடிந்த உலகக் கிண்ணத் தொடரில் 7 இன்னிங்சில் ஆடிய முகமது ஷமி 24 விக்கெட்டுகள் வீழ்த்தி பல போட்டிகளில் இந்திய அணியின் வெற்றிக்கு வழிசமைத்திருந்தார்.சிறந்த பந்துவீச்சாக 57 ஓட்டங்களை கொடுத்து 7 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தார். இதன்மூலம் இந்த தொடரில் அதிக விக்கெட்டுகள் கைப்பற்றிய வீரர் என்ற விருதை சமி தட்டிச் சென்றார்.இதற்கிடையே, விளையாட்டு அமைச்சிடம் பிசிசிஐ சிறப்பு கோரிக்கையை முன்வைத்து முகமது ஷமியின் பெயரை அர்ஜூனா விருதுக்கு பரிந்துரை செய்திருந்தது.இந்நிலையில், இந்த ஆண்டுக்கான விளையாட்டு விருதுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது.மேஜர் தயான்சந்த் கேல் ரத்னா விருது டேபிள் டென்னிஸ் வீரர்களான சிராக் சந்திரசேகர் ஷெட்டி, சாத்விக் ஜெயராஜ் ஜோடிக்கு அளிக்கப்படுகிறது.இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமி, பிரக்ஞானந்தாவின் சகோதரி வைஷாலி உள்பட 26 பேர் அர்ஜூனா விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.ஏற்கனவே கவுதம் கம்பீர், ஹர்பஜன் சிங், வீரேந்திர சேவாக், ராகுல் டிராவிட், சவுரவ் கங்குலி, ரவி சாஸ்திரி, சச்சின் டெண்டுல்கர், அனில் கும்ப்ளே உள்ளிட்ட கிரிக்கெட் வீரர்களுக்கு அர்ஜூனா விருது வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.அதேபோன்று அர்ஜூனா விருதை பெறும் முதல் இஸ்லாமியராகவும் முகமது ஷமி பதிவாகியுள்ளார்.இதற்கு முன்னர் இந்திய அணியில் இடம்பெற்றிருந்த இஸ்லாமிய வீரர்கள் எவரின் பெயரும் அர்ஜூனா விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டிருக்கவில்லை என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement