• Nov 25 2024

கடற்றொழிலாளர்களின் வங்கிக்கணக்குகளுக்கு வரவுள்ள பணம் - வெளியான அறிவிப்பு

Chithra / Aug 22nd 2024, 1:43 pm
image

 

கடற்றொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் அவர்கள் தொழிலுக்கு பயன்படுத்தும் எரிபொருள் லீற்றருக்கு 25 ரூபாவை உதவித்தொகையாக வழங்குவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

ஜனாதிபதி ரணில் தலைமையில் நேற்று மாலை ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா முன்வைத்த இந்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரமளித்துள்ளது.

கிராமிய கடற்றொழில் சங்கங்களின் சிபாரிசுடன் கடற்றொழில் பரிசோதகர்கள் ஊடாக சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்களின் அடிப்படையில் கடற்றொழிலாளர்களின் வங்கிக்கணக்குகளுக்கு இந்த உதவித்தொகை வழங்கப்படும்.

இந்த திட்டம் உடனடியாக அமுலுக்கு வரவுள்ளது. 

இதேவேளை மட்டக்களப்பு வெளிச்ச வீட்டு மேம்பாட்டு பணிகளுக்காக அமைச்சர் டக்ளஸின் கோரிக்கைக்கமைய 11 மில்லியன் ரூபாவை அமைச்சரவை வழங்கியுள்ளது.

கடற்றொழிலாளர்களின் வங்கிக்கணக்குகளுக்கு வரவுள்ள பணம் - வெளியான அறிவிப்பு  கடற்றொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் அவர்கள் தொழிலுக்கு பயன்படுத்தும் எரிபொருள் லீற்றருக்கு 25 ரூபாவை உதவித்தொகையாக வழங்குவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது.ஜனாதிபதி ரணில் தலைமையில் நேற்று மாலை ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா முன்வைத்த இந்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரமளித்துள்ளது.கிராமிய கடற்றொழில் சங்கங்களின் சிபாரிசுடன் கடற்றொழில் பரிசோதகர்கள் ஊடாக சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்களின் அடிப்படையில் கடற்றொழிலாளர்களின் வங்கிக்கணக்குகளுக்கு இந்த உதவித்தொகை வழங்கப்படும்.இந்த திட்டம் உடனடியாக அமுலுக்கு வரவுள்ளது. இதேவேளை மட்டக்களப்பு வெளிச்ச வீட்டு மேம்பாட்டு பணிகளுக்காக அமைச்சர் டக்ளஸின் கோரிக்கைக்கமைய 11 மில்லியன் ரூபாவை அமைச்சரவை வழங்கியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement