பணப்பையை குரங்கு பறித்துச் சென்று ஆங்காங்கே கொட்டியதில் அதை எடுப்பதற்கு மக்கள் அலமலுத்து ஓடிய காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
இந்தச் சம்பவம் உத்தரபிரதேசத்தின் அவுரையா மாவட்டத்தில் நிகழ்ந்துள்ளது. சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
தொண்டாபூர் கிராமத்த சேர்ந்த அனுஜ்குமார் என்ற நபர், தனது தந்தையுடன் பத்திரப்பதிவு செய்வதற்காக குறித்த பகுதிக்கு சென்றிருந்தார்.
குறித்த நபர்கள் தங்கள் மோட்டார் சைக்கிளில் 80 ஆயிரம் ரூபா ரொக்கத் தொகையை சிறிய பையில் வைத்திருந்தனர்.
குறித்த நபர் வக்கீலுடன் பத்திரப்பதிவு தொடர்பில் பேசிக் கொண்டிருந்த வேளையில், அங்கு வந்த குரங்கு, கண்ணிமைக்கும் நொடியில் பணப்பையை உணவுப் பொட்டலம் என்று நினைத்து தூக்கிக்கொண்டு அருகில் இருந்த மரத்தின் உச்சிக்கு ஓடிவிட்டது.
மரத்தில் இருந்து உணவுப் பொட்டலம் என நினைத்து பணப்பையை பிரித்த குரங்கு, அதில் உணவு இல்லாததால் ஏமாற்றத்துடன் ரூபாய்த்தாள்களை பிரித்து கீழே வீசியது.
அத்துடன் சில பணத்தாள்களை கிழித்து வீசியது. மரத்தில் இருந்து பண மழை கொட்டியதால் அங்கிருந்த பொதுமக்கள் அவற்றை எடுக்க போட்டி போட்டு முண்டியடித்தனர். இதனால் குறித்த பகுதியில் பதற்றநிலை உருவாகியது.
இறுதியில் தந்தை, மகன் இருவருக்குமாக 52 ஆயிரம் மட்டுமே மீட்டுக் கொடுக்கப்பட்டது. மீதிப் பணம் கிழிந்தும், பதுக்கப்பட்டும் மாயமாகின.
குரங்கு பணப்பையை எடுத்துச் சென்று வீசியதும் மக்கள் ஆங்காங்கே அதை எடுக்க ஓடிய காட்சி சமூக வலைத்தளத்தில் வெளியாகி பல லட்சம் பார்வையாளர்களைக் கவர்ந்து வைரலாகி வருகின்றது.
பணப்பையை பறித்து சென்ற குரங்கு; வீசியதும் ஓடிய மக்கள் பணப்பையை குரங்கு பறித்துச் சென்று ஆங்காங்கே கொட்டியதில் அதை எடுப்பதற்கு மக்கள் அலமலுத்து ஓடிய காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. இந்தச் சம்பவம் உத்தரபிரதேசத்தின் அவுரையா மாவட்டத்தில் நிகழ்ந்துள்ளது. சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, தொண்டாபூர் கிராமத்த சேர்ந்த அனுஜ்குமார் என்ற நபர், தனது தந்தையுடன் பத்திரப்பதிவு செய்வதற்காக குறித்த பகுதிக்கு சென்றிருந்தார்.குறித்த நபர்கள் தங்கள் மோட்டார் சைக்கிளில் 80 ஆயிரம் ரூபா ரொக்கத் தொகையை சிறிய பையில் வைத்திருந்தனர். குறித்த நபர் வக்கீலுடன் பத்திரப்பதிவு தொடர்பில் பேசிக் கொண்டிருந்த வேளையில், அங்கு வந்த குரங்கு, கண்ணிமைக்கும் நொடியில் பணப்பையை உணவுப் பொட்டலம் என்று நினைத்து தூக்கிக்கொண்டு அருகில் இருந்த மரத்தின் உச்சிக்கு ஓடிவிட்டது.மரத்தில் இருந்து உணவுப் பொட்டலம் என நினைத்து பணப்பையை பிரித்த குரங்கு, அதில் உணவு இல்லாததால் ஏமாற்றத்துடன் ரூபாய்த்தாள்களை பிரித்து கீழே வீசியது. அத்துடன் சில பணத்தாள்களை கிழித்து வீசியது. மரத்தில் இருந்து பண மழை கொட்டியதால் அங்கிருந்த பொதுமக்கள் அவற்றை எடுக்க போட்டி போட்டு முண்டியடித்தனர். இதனால் குறித்த பகுதியில் பதற்றநிலை உருவாகியது. இறுதியில் தந்தை, மகன் இருவருக்குமாக 52 ஆயிரம் மட்டுமே மீட்டுக் கொடுக்கப்பட்டது. மீதிப் பணம் கிழிந்தும், பதுக்கப்பட்டும் மாயமாகின. குரங்கு பணப்பையை எடுத்துச் சென்று வீசியதும் மக்கள் ஆங்காங்கே அதை எடுக்க ஓடிய காட்சி சமூக வலைத்தளத்தில் வெளியாகி பல லட்சம் பார்வையாளர்களைக் கவர்ந்து வைரலாகி வருகின்றது.