• Nov 25 2024

இளம் வேட்பாளர்களுக்கு அதிக வாய்ப்பு! பொதுத் தேர்தல் தொடர்பில் நாமலின் அறிவிப்பு

Chithra / Sep 30th 2024, 7:49 am
image

 

எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கலின் போது இளம் வேட்பாளர்களுக்கும் மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி பிரதிநிதிகளுக்கும் அதிக வாய்ப்புகளை வழங்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது. 

அக்கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச இந்த விடயம் தொடர்பில் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது, 50 வயதிற்குட்பட்டவர்களுக்கு அதிக வாய்ப்புகள் வழங்கப்படும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

அதேவேளை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் வெற்றிடமாகவுள்ள மாவட்ட மற்றும் தேர்தல் அமைப்பாளர் பதவிகள் விரைவில் நிரப்பப்படும் என்றும், 

இளம் தலைமைத்துவத்தை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தப்படும் என்றும் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். 

இளம் வேட்பாளர்களுக்கு அதிக வாய்ப்பு பொதுத் தேர்தல் தொடர்பில் நாமலின் அறிவிப்பு  எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கலின் போது இளம் வேட்பாளர்களுக்கும் மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி பிரதிநிதிகளுக்கும் அதிக வாய்ப்புகளை வழங்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது. அக்கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச இந்த விடயம் தொடர்பில் குறிப்பிட்டுள்ளார்.இதன்போது, 50 வயதிற்குட்பட்டவர்களுக்கு அதிக வாய்ப்புகள் வழங்கப்படும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.அதேவேளை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் வெற்றிடமாகவுள்ள மாவட்ட மற்றும் தேர்தல் அமைப்பாளர் பதவிகள் விரைவில் நிரப்பப்படும் என்றும், இளம் தலைமைத்துவத்தை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தப்படும் என்றும் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். 

Advertisement

Advertisement

Advertisement